திட்டமிட்டு பொய் சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் சிக்கல்தான்

ஒன்று உண்மையினை சொல்லிவிட வேண்டும் அல்லது எல்லோரும் கூடி இருந்து பாபநாசம் கமலஹாசன் குடும்பம் போல திட்டமிட்டு பொய் சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் சிக்கல்தான்

திமுக மேலிடம் அப்படித்தான் சிக்கியிருக்கின்றது

கலைஞர் கருணாநிதி எழுதியதாக ஒரு கடிதம் வெளியிட்டு ஆப்பசைத்த குரங்காக சிக்கியிருக்கின்றது திமுக‌

அதில் கலைஞர் சாந்தாவுக்கு வாழ்த்துக்கள் என்கின்றார், துர்கா ஸ்டாலின் தன்னை சாந்தா என நியுமராலாஜிபடி பெயர் மாற்றம் செய்தது 2000க்கு பின் என்கின்றது சில செய்தி

அந்த கையெழுத்து கலைஞரின் கையெழுத்து அல்ல என்கின்றது இன்னொரு ஆய்வு, அதாவது மு.க என்பதோடு பல இடங்களில் அவர் நிறுத்துவார், மகா முக்கியமான இடங்களிலே முழுபெயரும் எழுதுவார் என்கின்றது இன்னொன்று

ஆக பொய் மேல் பொய் சொல்லி மாட்டுகின்றார்கள் என வருகின்றது மேலதிக செய்திகள்

உண்மையில் இந்த விஷயம் மகா எளிமையானது, மிசா என்பது மகா கடுமையான சட்டம், கைது செய்யபட்டவர் பற்றி எந்த ஆதாரமும் ஆவணமும் பேணபடாது. யாரையும் கைது செய்யலாம் மிதிக்கலாம் ஏன் காணாமல் கூட செய்யலாம் எனும் கடும் சட்டம் அது

அப்படிபட்ட சட்டத்தில் ஸ்டாலின் மட்டுமல்ல யார் கைதானாலும் ஆதாரம் காட்டுவது சிரமமே

மிக எளிதாக கடந்து செல்லவேண்டிய விஷயத்தை தனக்கே உரிய வெற்று ஈகோவிலும் வறட்டு கவுரவத்திலும் பெரும் சர்ச்சையாக்கி சிக்குகின்றது திமுக, வறட்டு கவுரவம் யாருக்கும் பலன் தராது அதுவும் அரசியலில் இருப்பவர்களை மிக எளிதாக சாய்த்து தள்ளிவிடும்