திண்ணையில படுத்தாவது
“அதாவது சிங்கு எங்க ஊர்ல என்ன பிரச்சினைன்னா உனக்கு புரியமாதிரி சொல்றேன் கேளு
கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி “திண்ணையில படுத்தாவது திராவிட நாடு அடைவோம்”ம்னு சொலலி எங்க வீட்டு திண்ணையில படுத்தானுக, அப்புறம் திராவிட நாட்ட விட்டுபுட்டு இந்த திண்ணைதான் தமிழ்நாடுன்னு புதுசா ஒண்ண கிளப்பி எங்க திண்ணைய விட்டு எழும்பாம அங்கேயே உக்காந்தானுக
அப்புறமா மெல்ல மெல்ல தமிழ், சென்னை தமிழ், ஈழதமிழ் இப்படி டிசைன் டிசைனா தமிழ் பேசி வீட்டுக்குள்ள வந்துட்டானுக, அவனுககுள்ள எல்லா மொழியும் பேசிக்கிறானுக அது வேறவிஷயம் அத விட அட்டகாசம அத படிக்காத, இத கும்பிடாதன்னு ஒரே சேட்டை
அப்படியே திண்ணைய சாதிவாரியா பிரிச்சி சாதிக்கொரு திண்ணைன்னு வச்சிபுட்டு சாதி ஒழிச்சிட்டோம்னு சத்தம் வேற
திண்ணையில இருந்துதான திராவிட நாடு அடைவோம்னு சொன்னீங்க, இப்ப வீட்டுக்குள்ள வந்துட்டு அத படிக்காத, இத கும்பிடாதன்னா என்னய்யா அட்டகாசம், வீட்டை விட்டு போங்கய்யானா போகமாட்டேங்குறானுக சிங்கு, அவனுக போயிட்டா வீட்டுக்குள்ள பாஜாகா வந்திருமாம்
இவனுகளுக்கு திண்ணையில இடம் கொடுத்துத்தான் தப்பு சிங்கு, இனி ஏதாவது பண்ணி அடிச்சி துரத்தோணும் இல்ல நம்பள மொட்டைமாடிக்கு விரட்டிருவானுக அங்க நாங்க காக்கா மொழிதான் பேசிட்டு இருக்கணும் சிங்கு…”
