தினகரன் வென்றால் நிச்சயம் அது சாதாரண விஷயம் அல்ல
தினகரன் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கட்டும் ஆனால் ஆர்.கே நகரில் தன்னால் முடிந்தமட்டும் போராடுகின்றார். கடுமையான போராட்டம்
ஆனால் திமுக என்ன செய்கின்றது என்றால் சத்தமே இல்லை, மு.க ஸ்டாலின் புதிதாக ஒரு போராட்டத்தில் இறங்குகின்றாராம் அதாவது ஆளுநர் மாவட்டம் ரீதியாக ஆய்வு செய்வதை எதிர்ப்பாராம், மாநில சுயாட்சிக்கு குறுக்கே ஆளுநர் வந்தால் விடமாட்டாராம்
ஆட்சியே இல்லை, இதில் என்ன மாநில சுயாட்சி கோஷம் இப்பொழுது வேண்டியிருக்கின்றது? இது தினகரனோ பழனிச்சாமியோ செய்ய வேண்டிய போராட்டம், இவர் எதற்கு?
அப்படியும் அய்யா ஆளுநரே நன்றாக ஆய்வுசெய்து தேவையற்ற இந்த ஆட்சியினை கலையுங்கள் என தந்திரமாக சொல்லவும் தெரியவில்லை
ஒரு விஷயம் உறுதி
தினகரன் ஆர்.கே நகரில் தோற்றால் ஆவது ஒன்றுமில்லை ஆனால் வென்றால் நிச்சயம் அது சாதாரண விஷயம் அல்ல
திமுக தரப்பு வழக்கம் போல இது ஆளும்கட்சி நடத்தும் தேர்தல் அதனால் இப்படித்தான் நடக்கும் என சொல்லமுடியாது, காரணம் ஆளும் கட்சியே “ஆலம்பனா நான் உங்கள் அடிமை..” என கண் சிமிட்டிகொண்டிருக்கின்றது
ஆக இந்த தேர்தலில் வெல்லாவிட்டால் திமுகவிற்கு அது பெரும் பின்னடைவு, திமுக தொண்டர்களுக்கே அது உளச்சோர்வினை கொடுக்கும்
எதிர்கட்சி பிரிந்து கிடக்கின்றது, தினகரன் மீது சர்ச்சை ஏராளம், பழனிச்சாமி மீது காமெடி ஏராளம்
இதில் ஜெயிக்காத திமுக எதில் ஜெயிக்க போகின்றதோ? ஆனால் ஜெயிப்பதற்குரிய எந்த வழியிலும் அது உழைத்ததாக தெரியவில்லை
படுத்துகொண்டே ஜெயிப்பேன் என சொன்ன காமராஜரை தன் அசாத்திய உழைப்பால் வென்ற திமுக இப்பொழுது படுத்து கொண்டே ஜெயிப்போம் என்றால் அது நகைப்புகுரியது
தமிழிசை கூட தினகரனின் செயல்பாட்டினை தடுக்க ஏதாவது செய்ய ஏதோ பேசிகொண்டிருக்கும் போது, திமுக தரப்பில் சத்தமே இல்லை
எப்படியும் போகட்டும் இது எல்லாம் உடன்பிறப்புக்கள் உள்ளுறுப்புகள் கவலைபட வேண்டிய விஷயம் நமக்கென்ன?
நாம் நந்தினி சீரியல் பார்க்கலாம், அதில்தான் கவலைபடும் விஷயம் இருக்கின்றது
அந்த சீரியலின் கேமராமேன் சரியில்லை, தலைவியின் முக அழகை அவர் சரியான கோணத்தில் காட்டவில்லை என்பதால் தலைவியின் அழகு பூரணமாக தெரியவில்லை
நிலா கூட சரியான கோணத்தில் எடுக்கபட்டால்தான் அழகு என்பதால் அந்த ஓளிபதிவாளரை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது