திமுகவினர் திருவள்ளுவரை பற்றி சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள்
திமுகவினர் திருவள்ளுவரை பற்றி சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள், அவர்களுக்கான அறிவு எப்படி இருந்தது எனபதற்கு வரலாற்றில் காட்சி உண்டு
நெல்லை தமிழ் வளர்ந்த இடம், அகத்தியன் முதல் பாரதி வரை எத்தனையோ தமிழரிஞர்கள் உருவான இடம்
தமிழுக்கான அடையாளமாய் நெல்லையும் மதுரையுமே அன்று விளங்கின
அந்த நெல்லையில் வள்ளுவனுக்கு சிலை உண்டு, வாகையடி முக்கு பகுதியில் இருந்தது. அதில் நெற்றியில் விபூதியும் குங்குமமுமாக காட்சி தருவார் வள்ளுவர். பொதுவாக திராவிட இம்சைகளின் ஏரியா வட தமிழ்நாடும் காவேரி கரையுமாகும், தெற்கே வந்தால் பின்னி எடுத்துவிடுவார்கள்
ஆனால் திமுக அழிச்சாட்டியத்தில் காட்சிகள் மாறின, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபொழுது அதாவது கலைஞர் கருணாநிதியும் அண்ணாவும் திருகுறளை கொண்டாடிய பொழுது நெல்லையில் வினோதம் நடந்தது
ஒரு கோஷ்டி தார் சட்டியுடன் கிளம்பி திருவள்ளுவரின் நெற்றியில் இருக்கும் பட்டையினை ஒழிக்கின்றோம் என திருவள்ளுவருக்கே கரி பூசியது
ஆம் கலைஞர் உரை எழுதி மூத்திர சந்திலும் கரிகட்டையால் எழுதி வைத்த குறளின் வள்ளுவனை திமுக தொண்டனே தார்பூசி வைத்தான்
விஷயம் மேலிடத்துக்கு சென்றாலும் இம்மாதிரி விஷயங்களில் கொலையினையே கண்டுகொள்ளாதவர்கள் தார் பூச்சையா கண்டுகொள்வார்கள்
அம்மாதிரி அறிவார்ந்த தொண்டர்படை கொண்ட கோஷ்டி அது, அதனால்தான் அந்நாளைய நாம் தமிழர் தும்பிகள் என வரலாறு குறித்து வைக்கின்றது
அவர்கள் சொல்லும் குறளும் விளக்கமும் வள்ளுவனின் தோற்றமும் எப்படி இருக்கும்?