திமுகவின் ஒருவருட ஆட்சி
திமுகவின் ஒருவருட ஆட்சி பற்றி அவர்களே சரியான விளக்கம் அளிக்க முடியாமல் ஒருவருட சாதனை என எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாமல் இருக்கும் கனத்த அமைதி ஒன்றே உண்மை நிலையினை உலகுக்கு சொல்லும்
அவர்கள் எத்தனையோ நூறு வாக்குறுதிகளை அள்ளி எறிந்துதான் வந்தார்கள், அந்த வாக்குறுதியில் ஏதாவது சரியாக நிறைவேற்றபட்டிருக்கின்றதா என்றால் இல்லை
மதுகடைகள் அப்படியே நீடிக்கின்றன, மேற்கொண்டு சரக்கு விலை உயர்ந்திருக்கின்றது
பால் விலை உள்ளிட்ட விலைவாசிகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன, சொத்துவரி உள்ளிட்டவை கடுமையாக உயர்ந்திருக்கின்றன இது வாடகை போன்ற விஷயங்களில் கடும் விலை உயர்வினை கொடுக்கும்
பல டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி திட்டமிடுவதாக சொல்லி ரகுராஜன் கொண்ட குழு எல்லாம் அமைத்தார்கள், ரகுராம் ராஜன் காணொளியில் கூட அங்கு பேசியதாக தெரியவில்லை
பெட்ரோல் விலை மாநில அரசின் சார்பாக சில ரூபாய்கள் குறைப்பதாக அறிவித்தாலும் மேற்கொண்டு மாற்றமில்லை விலை எகிறுகின்றது அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர அஞ்சுகின்றார்கள்
மகா முக்கியமான கோஷமான நீட் தேர்வு ரத்து வாய்ப்பில்லை என்றாகிவிட்டது
இதுவரை தமிழகத்தில் கேட்காத “ஒன்றிய அரசு” எனும் வார்த்தையினை சட்டபடி பதவியேற்றவர்கள் சொல்வது சரியல்ல, முழு குழப்பமான அடுத்த தலைமுறையினை உருவாக்க பார்க்கின்றார்கள்
மாகாணத்தில் ஆயிரம் சிக்கல் இருக்கும் பொழுது பேரரிவாளன் உள்ளிட்டோரை அவசரமாக விடுவிக்க வேண்டிய மர்மத்துக்கும் விடை இல்லை
இந்து கோவில்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டபட்டிருந்தால் சட்டம் கடமையினை செய்யட்டும் ஆனால் இதர ஆக்கிரமிப்புகளெல்லாம் நீடிப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை
பல இடங்களில் இந்துவிரோத காட்சிகளில் அரசு மவுனம் சாதிப்பதும் சரியல்ல, உதாரணம் தருமை ஆதீன விவகாரம்
இந்தியாவின் இதர மாகாணங்களில் இருக்கும் லுலு மார்க்கெட்டை துபாய் சென்று ஏன் அழைத்துவரவேண்டும் என்றாலும் விடை இல்லை
முந்தைய அரசின் இலவசங்களெல்லாம் ரத்து செய்யபட்டிருக்கின்றது, ஆளுநருடன் மோதல் என்பது மாகாணத்துக்கு நல்லது செய்யாது
பல இடங்களில் மிகபெரிய விளம்பரங்கள் தென்படுகின்றன ஆனால் திட்டமோ பலனளிக்கவில்லை அல்லது தொடங்கவே இல்லை
விவசாய பட்ஜெட் என்பது சரி, ஆனால் அதனால் விவசாயிகளுக்கு என்ன லாபம் என்பதுதான் தெரியவில்லை
மின்வெட்டும் ஆரம்பித்தாயிற்று
திராவிட மாடல், தமிழக மாடல் என்கின்றார்கள் அது வழக்கமான அவர்கள் திராவிட கொள்கை போல ஒருவருக்குமே புரியவில்லை
முதலாளித்துவம்,கம்யூனிசம், சோஷலிசம் , சர்வாதிகாரம் என நான்கு வகையில்தான் ஒரு திட்டமும் அரசும் அமைய முடியும் அதை தாண்டி திராவிட மாடல் என்றால் என்னவென்று அவர்கள்தான் விளக்க வேண்டும், அதை கடைசிவரை விளக்கவே இல்லை
சுருக்கமாக சொன்னால் பழனிச்சாமி அரசின் மேல் என்னென்ன குற்றசாட்டுக்களை அடுக்கினார்களோ அதனை இவர்கள் அப்படியே பின்பற்றுகின்றார்கள், சில இடங்களில் இரட்டிப்பாக பின்பற்றுகின்றார்கள்
இவ்வளவுக்கும் பழனிச்சாமியிடம் குடும்ப அரசியல் கிடையாது இவர்களிடம் குடும்பம் நுழையா துறையே கிடையாது
இந்த ஒரு வருடத்தில் இரு பெரும் ஆறுதல்கள்தான் உண்டு
முதலாவது பெரும் போராட்டம் என எதுவுமில்லை, அரசு ஊழியர்களுக்கு புதிதாக எதுவுமில்லை என்றாலும் கனத்த அமைதி, எல்லா தரப்பும் அமைதி, அப்படி ஒரு அமைதி நிலைநாட்டபட்டிருக்கின்றது
இரண்டாவது பல தகவல்கள் அடிப்படையில் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி பேட்டிகொடுத்தபின் பல விஷயங்கள் பின்வாங்கபடுகின்றன, அதாவது அண்ணாமலை எனும் பாஜக தலைவர் மேல் ஒரு அபிமானம் இருக்கின்றது அது நல்லது
இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது, அதில் என்ன மாற்றம் வரும் என்றால் வராது, இப்படியேதான் போகும்
அவர்களின் ஒரே கனவு அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தல், அவர்களின் இலக்கெல்லாம் அது நோக்கித்தான் இருக்கும் அது நடந்துமுடிந்தபின் மறுபடி சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவார்கள் அவ்வளவுதான் ஆட்சி
தி.மு.க., ஆட்சியில், அவர்களது வாரிசுகளுக்கு பதவி,குடும்ப வியாபாரம், போட்டியாக வந்தவர்களை அதிகாரம் கொண்டு நசுக்குவது போன்ற அவலங்கள் அரங்கேறயுள்ளன
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு
தி.மு.க., ஆட்சியில், தமிழ் நாடு கொலை நகராக மாறியது. தமிழகத்தில் கூலிப்படைகளின் அட்டூழியம் தலைதுாக்கியது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திகழ்ந்த ஆட்சி. ஹிந்து கோயில்கள் இடித்தல், இந்து மத நம்பிக்கையில் தலை இடுதல் இவைகள் தான் ஓரு வருட ஆட்சி