திமுகவுக்கும் காங்கிரசுக்கும் முட்டிகொண்டது
தேர்தல் முடிந்து 3 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் முட்டிகொண்டது
காங்கிரசை கழற்றிவிட்டால் திமுகவுக்கு ஒரே வாய்ப்பு பாஜக அது அன்றி வேறல்ல
பின் எங்கிருந்து மதவாதத்தை, பாசிசத்தை, ஆரியபார்பானிய கொடுமைகளை தடுப்பது? பெரியாரை அண்ணாவை காப்பது?
மெதுவாக பாஜக காலடியினை நோக்கி நகர்கின்றது திமுக
டெல்லியில் அமித்ஷா முதல் மோடி வரை வைகோ சந்திப்பதும் சட்டென காங்கிரஸை வெட்டிவிட நினைப்பதும் அதைத்தான் காட்டுகின்றது
விரைவில் பாஜக திமுக அந்த கம்பராமாயண பாடலோடு பாஜக பக்கம் சேரலாம், இந்த பாடல்தான் அது
“குகனோடும் ஐவரானோம் முன்பு குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகலரும் கானம் தந்த புதல்வரால் பொழிந்தான் உந்தை”
அதாவது குகனோடு ஐவரானோம் என ராமன் சொன்னது போல, பாஜகவோடு இருவரானோம் ஆர்.எஸ்.எஸ்ஸோடு மூவரானோம், சங் பரிவாரோடு நால்வரானோம் சிவசேனாவோடு ஐவரானோம் என திமுக பாடலாம்
அதன் பின் இந்த திமுக குபீர் திடீர் அல்ட்ராசிட்டி முட்டு கழகபடை எந்த முகத்தோடு இங்கு சுற்றுமோ தெரியாது
எப்படியோ அனுமார் வேலையினை கன கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றார் வைகோ
அட முன்பு அவர் கள்ளதோணியில் இலங்கைக்கு சென்றது கூட நினைவுக்கு வந்து தொலைக்கின்றது
ஆக ராவணன் யார்?
ஹிஹிஹி வேறு யார் நம் பழனிச்சாமி அய்யாதான், அந்த பன்னீர் என்பவருக்கு விபீஷ்ணன் பட்டத்தை இப்பொழுதே எடுத்து வைக்கலாம்