திமுகவும் அதிமுகவும் உள்ளாட்ட்சி தேர்தல் நடப்பதை விரும்பவில்லை
நடக்கும் காட்சிகளை கண்டால் ஒன்று புரிகின்றது.
திமுகவும் அதிமுகவும் உள்ளாட்ட்சி தேர்தல் நடப்பதை விரும்பவில்லை, அதிமுக மிகவும் யோசிக்கின்றது , உட்கட்சி குழப்பம் முதல் பல வகையான குழப்பங்களை அதிருப்திகளை இது உருவாக்கும் என அது மாவட்டம் பிரிப்பு அது இது என சுற்றி வருகின்றது
உள்ளாட்சி தேர்தல் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தும் அது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அஞ்சுகின்றது
திமுக கணக்கு வேறுமாதிரியானது, நமக்கெல்லாம் தளபதி தெரியும் ஆனால் 33 குட்டி தளபதிகளும் அவர்களுக்கு கீழ் பட்டிதொட்டியெல்லாம் சுட்டி தளபதிகள் இருப்பது பலருக்கு தெரியாது
இந்த குட்டி சுட்டி தளபதிகளுக்கு எதிர் தளபதி அதிமுகவில் அல்ல திமுகவிலேதான் உண்டு, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கபட்டால் “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ” தொடங்கி “ஆள்வதற்கு நீ மாள்வதற்கு நானா” எனும் கருணாநிதியின் வசனம் கட்சிக்குள்ளே கேட்கும்
அந்த சண்டையில் அறிவாலயம் புகார் மனுக்களாலே நிரம்பும், பெரும் கலகம் வெடிக்கும் என திமுக அஞ்சுகின்றது
இவர்கள் இருவரும் இப்படி யோசிக்க காங்கிரசும் பாஜகவும் டீ குடிக்க சென்றாயிற்று
சாதிய கட்சிகளும் நாம் தமிழர் கோஷ்டியும் சில வார்டுகளை கைபற்றி வெற்றி முழக்கமிடலாம் என திட்டமிடுகின்றன எனினும் அதிலும் தோற்றால் கேவலம் எனும் அச்சமும் அவைகளிடம் உண்டு
சுருக்கமாக சொன்னால் உள்ளாட்சி தேர்தலை தேவையற்ற பந்தயமாக இரு கட்சிகளும் கருதுகின்றன, அதை தள்ளிவிட முடியுமா என மிகவும் யோசிக்கின்றன
இதோ திமுக நீதிமன்றம் சென்றாயிற்று, அதிமுக அவர்களை பார்த்து “விஸ்க் .. விஸ்க்.. அப்படித்தான்..” என கண்ணடிப்பது உங்கள் ஞான கண்களுக்கு தெரியலாம்
