திமுக அமைதிகாப்பது அதன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல
கூட்டணி கட்சி, மதாவதத்தை ஒழிக்கவும் ஜனநாயகத்தை காக்கவும் தவிர்க்கவே முடியாத கட்சி, இன்னும் ஏகபட்ட விஷயங்களுக்கு திமுகவுக்கு மிக தோதான கட்சி திமுக
நிச்சயம் பாஜக பக்கம் அவர்கள் செல்லமுடியாது, மூன்றாவது அணி என்பது இனி மூன்று லோகங்களிலும் சாத்தியமில்லை
ஆக திமுகவுக்கு ஒரே தேர்வு காங்கிரஸ்
அந்த காங்கிரஸ் சிக்கலில் இருக்கும் பொழுது அதன் மூத்த தலைவர் கைது என தேசம் முழுக்க காங்கிரஸ் கொதித்துகொண்டிருக்கும் பொழுது திமுக அமைதி காக்கின்றது
இது ஸ்பெக்ட்ரமில் காங்கிரசுக்கு திமுக காட்டிய பதிலடி என்றால் அதைவிட பரிதாபம் இருக்கமுடியாது
ஸ்பெக்ட்ரமில் சிக்கிய கனிமொழியினை எம்பி ஆக்கியதும் பின்பு சாட்சிகள் ஆதாரங்களை இழுத்தடித்து சிபிஐயினை முடக்கி கனிமொழி தயாளு ஆ.ராசா என எல்லோரையும் காப்பாற்றியது காங்கிரஸ்
ஆம், கனிமொழி மேல் தவறு இல்லை என நீதிபதி சொல்லவில்லை மாறாக சிபிஐ தன் தரப்பு ஆவணங்களை சரியாக சமர்பிக்கவில்லை என்பதே அவரின் தீர்ப்பு அது திமுகவுக்கு சாதகமானது
இப்பொழுது திமுக அமைதிகாப்பது அதன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல
டெல்லியில் போராட்டம் என அறிவித்துவிட்டு , எந்த டெல்லியில் காங்கிரஸிடம் கூட்டணி, மந்திரிபதவி என பேசினார்களோ அந்த காங்கிரஸை முறைத்துவிட்டு போராடுவது சரியாக வராது
இரு தேசிய கட்சிகளையும் பகைத்து கொள்வது தனக்கு தானே சூனியம் வைத்து கையினை கட்டிகடலில் விழுவது போன்றது
திமுக அதை செய்கின்றது
அப்படி என்ன கோபம் காங்கிரஸ் மேல் இப்போதைய தலைவருக்கு இருக்கமுடியும்?
கனிமொழியினை ஏன் வழக்கில் இருந்து காங்கிரஸ் காப்பாற்றியது எனும் கடும் கோபமாக இருக்கலாமோ என்னமோ?