திமுக இணைய உடன்பிறப்புகள் படு மோசம் : விகடன்

திமுக இணைய உடன்பிறப்புகள் படு மோசம்- : விகடன்

ஆமாம், இன்னும் விகடன் உயர்த்தி பிடிக்கும் பிரபாகரனின் பிம்பத்தை அடித்து நொறுக்கி புலிகளுக்கு கலைஞர் செய்த உதவிகளை சொன்னது இணையதள திமுக‌.

புலிகளை மிக பெரும் தியாகிகளாகவும், கலைஞரை துரோகியாகவும் காட்ட விகடன் எடுத்த முயற்சிக்கெல்லாம் எதிராக எழுதியன் இனையதள திமுககாரன்

சீமானை எல்லாம் ஒரு ஆளாக கருதி விகடன் வெளியிட்ட பேட்டிகளை தோலுரித்தது இணையதள திமுக‌.

இன்னும் பல இடங்களில் விகடனின் போலி முகமூடியினை அதாவது எஸ்.எஸ் வாசன் காலத்திலிருந்தே விகடன் கொண்டுவரும் ஒருவிதமான திமுக காழ்புணர்ச்சியினை , கலைஞரே சகித்துகொண்ட இம்சையினை பொறுக்க முடியாமல் போட்டு சாத்துகின்றான் அல்லவா இணையதள திமுக , அதனால் விகடனுக்கு பொறுக்கவில்லை

திமுகபற்றி இல்லாதது பொல்லாதது என அள்ளிவிடுவது விகடனுக்கு மிக்க மகிழ்ச்சியான விஷயம் என்றால், பதிலுக்கு யாரும் கேட்காமலே போய்விடுவார்கள் என எதிர்பார்ப்பதா?

இவர்கள் ஆயிரம் அழிச்சாட்டியங்களை எழுதுவார்களாம், சைமன் முதல் திருமுருகன் காந்திவரை வளர்த்துவிடுவார்களாம் கலைஞருக்கு எதிராக கொம்பு சீவிவிடுவார்களாம்

அதனை எதிர்த்து உண்மையினை சொன்னால் திமுக இணைய உறுப்பினர்கள் மோசமாம்.

உண்மையில் இன்னும் விகடனை நேரடியாக திமுகவினர் சாடவில்லை, சாதாரண விஷயங்களுக்கே இப்படி அழும் விகடன், அந்த திமுக உறுப்பினர்கள் பொங்கி அடித்தால் எப்படி அழுமோ தெரியவில்லை

விகடனுக்கு என்ன வயிற்றேரிச்சல் என்றால் இதுதான்

அதிமுக தொண்டனுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது, உருப்படியாக எழுதமாட்டான். காங்கிரஸில் உள்ளவனுக்கு தான் எந்த கோஷ்டி என்றே தெரியாது. பாஜகவினர் குஜராத், மபி , உபி என்றே எழுதி தள்ளும் கோஷ்டி பிரயோஜனமில்லை

சீமான் கோஷ்டி கேட்கவே வேண்டாம் படு காமெடி ரகம், தமிழர் ஆட்சியில் அமெரிக்காவினை காலுக்கு அடியில் வைப்போம் எனும் ரீதியில் இருக்கும்

இணையத்தில் உருப்படியாகவும், சிந்திக்க வைக்கவும், சில இடங்களில் அழுத்தமான உண்மையினை தைரியமாக‌ எழுதுவதும், அதிகம் வாசிப்பதும் திமுகவினரே, அதுதான் விகடனின் எரிச்சலுக்கு காரணம்

விகடன் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும்

கும்பகோணம் சீனிவாசனுக்கு முன்பே தைரியமாக எழுதியர் பெரியார், அதனை தொடர்ந்து அழகாக எழுதியவர் அண்ணா, அதை நெருப்பாக்கியவர் கலைஞர்

இப்படி எழுத்து பாரம்பரியத்தில் வந்த திமுகவினர் சும்மா இருப்பானா? களம் கிடைத்தால் விளாசி தள்ளமாட்டானா?

இணையத்தில் அதுதான் நடக்கின்றது.