திமுக என்பது பிரைவேட் கம்பெனி

“திமுக என்பது பிரைவேட் கம்பெனி, அது தகப்பனுக்கு பின்னால் மகனுக்கும் பின் அவர் மகனுக்குமே செல்லும், இது நடக்கும், நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்” என அன்றே சொன்னவர் சோ ராமசாமி
2016லே அவர் சொன்னதுதான் இன்று அப்படியே நடக்கின்றது, பெரும் அரசியல் ஞானிகளின் கணிப்பு தப்புவதே இல்லை
சோ ராமசாமி ஏன் அரசியல் விமர்சனத்தில் தனி இடம் பிடித்தார் என்றால் இப்படித்தான்
ஆனால் இதே சோ ராமசாமி உடல் நலம் கெட்டு இருந்தபொழுது நேரில் சென்று பார்த்தார் கலைஞர்
அவர்களுக்குள் இருந்த புரிந்துணர்வு அப்படி இருந்திருக்கின்றது, சிங்கத்தின் பலம் இன்னொரு சிங்கத்திற்குத்தான் தெரியும்