திமுக எப்படிபட்ட அயோக்கிய கட்சி என்பது அப்பொழுது விளங்கும்

ஆம் அதை சொல்லத்தான் வேண்டும், திமுக எப்படிபட்ட அயோக்கிய கட்சி என்பது அப்பொழுது விளங்கும்

1957 , 58ல் திமுக நாம் தமிழர் போல ஒப்புக்கு இருந்து வம்பு பேசிகொண்டிருந்தது, உருப்படியாக என்றுமே எதையுமே செய்யாதது போல அன்றும் ஒன்றும் சிந்திக்காமல் ஏதோ சொல்லிகொண்டிருந்தார்கள்

அப்பொழுதுதான் 5 லட்சம் தமிழக மக்களை திருப்பி அனுப்ப சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய டெல்லி வந்தார்

மிகபெரும் சதியோடு வந்து ஈழதமிழரும் சிங்களரும் இணைந்தே அவர்களை வெளியேற்றுகின்றோம், 5 லட்சம் பேரை உங்கள் நாடு பெற்றுகொள்ளட்டும் என வற்புறுத்தி ஒப்பந்தமிடுகின்றார்

பெருந்தன்மையான நேரு அதை ஏற்றுகொள்கின்றார், சர்வதேச சட்டமும் அதற்கு சரியாக பொருந்திற்று

5 லட்சம் தமிழர்கள் நாடற்ற அகதிகள் என இலங்கை அறிவித்த நேரம் , ஈழதமிழரும் சிங்களரும் கைகோர்த்து அடாவடி செய்து அவர்களை அடித்துவிரட்டிய நேரம் இங்கு சலசலப்பு இருந்தது

ம.பொ.சி முதலானோர் எதிர்குரல் கொடுத்தனர், இன்னும் பலர் கடுமையாக எதிர்த்தனர்

“தேயிலை கொளுந்தை கிள்ள சென்ற எம்குல கொழுந்துகளை கிள்ளாதே லங்காபுரியே” என்ற வசனங்கள் எல்லாம் வந்தன‌

இப்படி எல்லாம் பெரும் எதிர்ப்பு வர திமுக என்ன சொன்னது தெரியுமா?

“கணவனை இழந்த சிரீமாவோவும், மனைவியும் இழந்த நேருவும் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள்” என சொல்லி ஜனகராஜ் பாணியில் கண்ணடித்து சிரித்துகொண்டிருந்தது

அப்படிபட்ட கடும் தமிழருக்கான கடும் உழைப்பு வரலாற்றை கொண்ட கட்சி அது

அந்த திமுகதான் இன்று ஈழதமிழருக்காக கொதிக்கின்றதாம்

பழம் வரலாறை திருப்பி பார்த்துவிட்டு இவர்கள் முகத்தில் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்