திமுக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் ஆர்பபட்டம்
திமுக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் ஆர்பபட்டம் செய்ய போகின்றதாம்.
நல்லவரோ கெட்டவரோ அந்த கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் இம்மாதிரி ஆடமாட்டார், தன் தேர்ந்த அனுபவத்தில் காட்சிகளை மாற்றி மத்திய அரசுக்கு வேறுமாதிரி சிக்கல் கொடுப்பார்
அதாவது இந்நேரம் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா?
“அந்நிய நாட்டு மக்களை வெளியேற்றுவதில் இந்த அரசு காட்டும் அவசரத்தை, இந்நாட்டு நிலமும் தமிழர் சொத்துமான கச்சதீவினை அந்நியரிடம் இருந்து மீட்பதில் காட்டவே இல்லை என்பதுதான் தமிழர் மேலான டெல்லியின் பாசிச நடவடிக்கை
நாம் இந்நாட்டு மக்கள் இல்லையா?, வடகிழக்கில் காட்டும் நிலமீட்பினை தென்னகத்திலும் காட்டினால் என்ன? கச்சதீவு இழந்து தமிழினம் அனுதினமும் சந்திக்கும் வேதனை என்ன?
கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டாலும், தமிழக மீணவர்கள் களைத்து ஓய்வெடுக்கவும் வலை உலர்த்தவும் சட்டத்தில் இடமுண்டே? அதை ஏன் இவர்கள் செய்யவில்லை?
அசாம் மக்களுக்கு ஒரு நீதி, தமிழருக்கு அநீதி என்பதுதான் இவர்கள் செயல்பாடா?”
ஆம், மிக தேர்ந்த அனுபவம் என்றால் அதுதான், மத்திய அரசு எதை தொட தயங்குமோ அதில் அவர்களை கோர்த்துவிடுவது, அப்படியே தமிழரிடம் நற்பெயரை தக்க வைத்து அரசியல் செய்வது
மிக தேர்ந்த தந்திரம் இது, கருணாநிதி இதில்தான் கட்சியினை தக்க வைத்தார்
இதை எல்லாம் இப்போதைய திமுக தலமையிடம் எதிர்பார்க்க முடியாது.
மீறி கேட்க சொன்னால் “தமிழர் சொத்தான மாலதீவினை ஏன் இந்திய அரசு மீட்கவில்லை?” என சீறும், அனைவரும் சிரித்து கொண்டிருப்பார்கள்