திமுக தலைவராகிவிட்டார் ஸ்டாலின்
திமுக தலைவராகிவிட்டார் ஸ்டாலின், ஆனால் உண்மையான சவால்கள் இனிதான் அவருக்கு காத்திருக்கின்றன
சுகமாக அமர்ந்து உத்தரவிடும் பதவி அல்ல அது , முள் இருக்கை
கட்சி, எதிர்கட்சி, மாநில கட்சிகளை நசுக்க விரும்பும் பலமிக்க டெல்லி, அழகிரி, இந்த முகநூல் திமுக இம்சைகள், இது போக ஏக சவால்களை இனிதான் அவர் எதிர்கொள்ள வேண்டும்
தந்தை போல் எல்லா சவாலையும் அவர் வெல்ல வாழ்த்துக்கள்
திமுக தலைவர் வந்துவிட்டார் நல்லது
ஆனால் தளபதி என்பதே அதன் பிரதான பாத்திரம். அண்ணா அப்படி கொண்டாடபட்டார், பின் ஸ்டாலின் தளபதி ஆனார்
அடுத்த “தளபதி” யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி
யாரப்பா அடுத்த தளபதி?
காவேரி பொங்கி பாயும்பொழுது அந்த விவசாய “புரட்சி”யினை கல்லணை பக்கம் செய்தால் என்ன?
சினிமாவில்தான் செய்ய வேண்டுமா?
விவசாய புரட்சிக்கு எதற்கு சிலம்பு சண்டை காட்சி?
மிஸ்டர் சீமான், விவசாயம் செய்ய சென்றாலும் போர்கோலத்தில்தான் செல்வீரா?
ஒழுங்காக கோவணம் உடுத்தி ஏர்கலப்பை, நாற்றுகட்டு என சுமந்து கொண்டு நின்றால்தான் தும்பிகள் உருகும்
அன்பில் பொய்யாமொழி வீட்டிற்கு சென்று நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்
தா.கிருட்டினன் வீட்டிற்கு அவரின் நினைவு நாளில் ஸ்டாலின் செல்வாரா இல்லையா என நாம் கேட்க கூடாது..