திமுக தேசியத்தில் கலந்துவிட்டது..
திமுக திருந்திவிட்டது, பிராமண எதிர்ப்பை கைவிட்டுவிட்டது.ஆம் திப்பு சுல்தான் பிராமணரை போற்றி பாதுகாத்தவன், அவனின் காரிய தரிசி பிராமணனேஅவனுக்கு ஜாதகம் பஞ்சாங்கம் இதில் மிகபெரும் நம்பிக்கை இருந்தது, அந்த திருவரங்கபட்டினம் எனும் ஸ்றிரங்கபட்டினம் சாமுண்டீஸ்வரிக்கு 6 கால பூஜை செய்ய அர்ச்சகர்களை நியமித்தவன் அவன்ஆக பிராமணரை நன்றாய் ஆதரித்த திப்புவின் புகழைபாட கிளம்பிவிட்டது திமுக படைபாஜக செய்யவேண்டியதை அக்கட்சி அரசியலுக்காக செய்யவில்லை ஆனால் திமுக மிக சரியாக செய்கின்றதுபோதுவாக நாட்டுக்கு போராடியவர்களை திமுக கண்டுகொள்ளாது, வெள்ளையனை எதிர்த்தவனை திமுகவுக்கு பிடிக்காது, அவன் சமூக நீதிக்கு என்ன செய்தான் என்றுதான் கேட்கும்இப்பொழுது திப்புவினை நோக்கி அவன் சமூகநீதிக்கு என்ன செய்தான் என கேட்காமல் வந்துவிட்டார்கள்,பரவாயில்லை மாறிவிட்டார்கள்.பிராமணனை போற்றினால் என்ன இல்லை பிராமணை போற்றிய திப்புவினை போற்றினால் என்ன? அவர்கள் திருந்திவிட்டதற்கு வாழ்த்துக்கள்…அவர்களை திருத்திய எடியூரப்பாவுக்கும் வாழ்த்துக்கள்திமுக தேசியத்தில் கலந்துவிட்டது..