திமுக மேல் என்ன வன்மம்?

ஏன் கலைஞரை போற்றுகின்றாய் அதே நேரம் இப்பொழுதிருக்கும் திமுக மேல் என்ன வன்மம் என்றால் சொல்ல ஒன்றுமில்லை

இப்போதிருக்கும் திமுக என்பது திமுக எனும் மூன்று எழுத்தை போல ஸ்டாலின் உதயநிதி கனிமொழி என ஆகிவிட்டது

கலைஞர் எதில் தனித்து நின்றார் என்றால், காமராஜரை எதிர்த்து அவரின் அரசியல் இருந்தது ஒரு கட்டத்தில் ஆட்சி அவரிடம் சிக்கி கொண்டது

பொற்கால ஆட்சி நடத்திய காமராஜரை வீழ்த்தி மக்கள் இந்த ஆட்சியினை நம்மிடம் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் அதையும் மீறிய ஆட்சியினை கொடுக்க வேண்டும் என்ற ஒருவித வெறியும் கூடுதல் பொறுப்பும் கலைஞருக்கு இருந்தது

ஆம் அவருக்கு மனசாட்சி இருந்தது

தன் ஒவ்வொரு திட்டமும் காமராஜர் ஆட்சியினை மீறியதாக வரலாற்றில் நிற்கவேண்டும் என கனவு கண்டார், அதை நோக்கி உழைத்தார்

அந்த முதல் 5 ஆண்டு ஆட்சி கலைஞரின் மாபெரும் சாதனை

ஆனால் அவருக்கு சிக்கல் ராமசந்திரன் வடிவில் உருவாக்கபட்டது போராடினார் கலைஞர், அதன் பின் கிடைத்த 2 ஆண்டுகளில் அற்புதமான திட்டங்களை கொடுத்தார்

அதன்பின் ஜெயலலிதாவினை கலைஞருக்கு எதிராக நிறுத்தினார்கள்

கலைஞரும் அட்டகாசமாக சமாளித்தார் அற்புதமான திட்டங்களை கொண்டுதான் வந்தார், நல்லாட்சிதான்

1969 1974 வரையான காலம் 1987 1989 வரையான காலம் 1996 2001 வரையான காலம் எல்லாம் கலைஞரின் பொற்காலம்

ஆம் 1960களில் அவரில் இருந்த நெருப்பும் பொறுப்பும் கொஞ்சமும் குறையவில்லை

காமராஜரை வீழ்த்திவிட்டு வந்தோமே, அவரை விட நல்லாட்சி கொடுத்தாக வேண்டும் என அவ்வளவு பொறுப்போடு போராடினார்

ஆனால் கடைசிமுறை ஆட்சிக்கு அவர் வந்தபொழுது அவர் கையில் ஏதுமில்லை குடும்பத்தார் ஏராளம் உள்ளே வந்தனர்

குடும்பபாசம் எனும் விலங்கு கலைஞரின் கையினையும் கால்களையும் கட்டிபோட்டபின் அந்த பழைய கலைஞர் இல்லை வெறும் பொம்மையானார்

விளைவு என்னவெல்லாமோ நடந்து ஜெயா இருமுறை முதல்வராக வாய்ப்பு கிட்டிற்று

ஆக கவனியுங்கள்

காமராஜரை மீறி வந்த கலைஞர் அந்த பொறுப்புடன் பல நல்லவற்றை செய்தார் மறுக்க முடியாது, மாநில சுயாட்சியும் மத்திய அரசுடன் மோதலும் இல்லை என்றால் மதுகடை வந்திருக்காது, அப்பொழுதும் அவர் முதலில் மூடினார் அடுத்து தொடங்கியது ராம் சந்தர்

விஷயம் இதுதான்

காமராஜரை மீறி நல்லாட்சி கொடுக்க துடித்தார் கலைஞர் அவரின் ஒவ்வொரு அசைவும் அதிலேதான் இருந்தது

ஆனால் இப்பொழுது ஆள்பவர் பழனிச்சாமி, இவரை அடுத்து ஸ்டாலின் வந்தால் என்னாகும்?

துரதிருஷ்டவசமாக பழனிசாமினை முன்மாதிரியாக கொண்டே ஸ்டாலின் ஆட்சி கிடைத்தால் ஆள்வார் போல..

போகிற போக்கு அப்படித்தான் தெரிகின்றது

நாடு தாங்குமா?