தியாக நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் மோடி.
ஒரு நல்ல ஆட்சியாளனின் திறமை நாடு சிக்கலில் மாட்டும்பொழுதுதான் பளிச்சிடும், மோடியின் அசத்தலான நடவடிக்கை இப்பொழுது மலைமேல் ஜோதியாய் மின்னுகின்றது
மோடி கொரோனா பரவ ஆரம்பித்த ஜனவரியில் இருந்தே பல விஷயங்களை செய்துவந்தார், உச்சமாக கொரோனா வெடித்ததும் முதல் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதியினை மார்ச் 20ம் தேதியே நிறுத்தினார்
இன்று 30 நாடுகள் இந்திய மருந்துக்காக கெஞ்சுகின்றன அமெரிக்க்கா உட்பட, மோடியோ எம் மருந்து எம்மக்களுக்கே என சொல்லிகொண்டிருக்கின்றார், ஆக இந்தியா போதுமான மருந்துகளை கையில் வைத்திருக்கின்றது
ஐ.எஸ்.ஆர்.ஓ முதல் டி.ஆர்.டி.ஓ வரை எல்லா நிறுவணங்களையும் மருத்துவ உபகரணம் பக்கம் திருப்பினார் , பெரும் தொழிலதிபர்கள் மோடி கேட்டுகொண்டதுடன் சானிட்டைசர் முதல் முககவசம் வரை தயாரிப்பில் இறங்கினர்
முழு அடைப்பு எனும் சவாலை எடுத்து தேசத்தின் கொரோனா எண்ணிக்கையினை சொற்பமாக கட்டுக்குள் வைத்திருக்கின்றார் மோடி
இனி உலகம் பொருளாதர சிக்கலில் சிக்கும் நேரம் என்பதை உணர்ந்து இந்தியாவில் சிக்கன நடவடிக்கைகளை அறிமுகபடுத்துகின்றார்
இனி டெல்லியில் எம்பிக்களுக்கு ஓராண்டு 30% சம்பளம் வெட்டபடும், எம்பி நிதி போன்றவை ஈராண்டுக்கு நிறுத்தபடும்
( நாம் சில தினங்களுக்கு முன்பே இனி அரசின் செலவுகளை சமாளிக்க எம்பி, எம்.எல்.ஏக்கள் சம்பளம் குறைக்கபட வேண்டும் என சொல்லியிருந்தோம்)
ஆக மகா துணிச்சலான , தியாக நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் மோடி. இப்படி ஒரு தலமை கிடைத்திருப்பது தேசத்தின் வரம்
இனி மாநில அரசு இதை முன்மாதிரியாக கொண்டு சம்பள குறைப்பு செய்ய வேண்டிய நேரம், திமுக தலமை விபரமானது என்றால் பாதி சம்பளம் போதும் அல்லது வேண்டாம் என சொல்லும் , அது பழனிச்சாமி கூட்டணியில் நெருக்கடியினை ஏற்படுத்தும்
ஆம் சம்பளத்தை அள்ளி கொடுத்தே எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருகின்றார் பழனிச்சாமி, இந்த இடத்தில் கருணாநிதி இருந்தால் “ஒரு ரூபாய் கூட வேண்டாம், நாங்கள் மக்கள் பணியாளர்” என களத்துக்கு வருவார்
ஆனால் இப்போதுள்ள தலமையிடம் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது
ஆக இனி எம்பிக்களுக்கு சம்பள குறைப்பு இது இன்னும் 30%ல் இருந்து 50% வரும் வரை வெட்டபடலாம் என்கின்றார்கள்
சும்மாவே கோடிகணக்கில் செலவழித்து , அதாவது அமைச்சராகலாம் சம்பாதிக்கலாம் என பல கோடிகளை கொட்டி எம்பி ஆகிய திமுக எம்பிக்களுக்கு மோடி அரசு வந்தது பேரதிர்ச்சி
இப்பொழுது சம்பளமும் வெட்டபடுவது அதை விட அதிர்ச்சி, நிச்சயம் இதை போராட்டமாக ஆக்க முடியாது ஆக்கினால் பொதுமக்களே இவர்களை கொரோனா வார்டில் தள்ளிவிடுவார்கள்
இதனால் சோதனை மேல் சோதனை என அமர்ந்திருக்கின்றது திமுக எம்பி கோஷ்டி, வைகோ எப்பவருக்கு விஷயம் முன்பே தெரியும் போல, சில நாட்களாக சத்தமே இல்லை, அனுபவஸ்தன் என்றால் அவர்தான்
இனி டெல்லி பாராளுமன்றத்துக்கு தமிழக எம்பிக்கள் ஒருமாதிரி செல்வார்கள், அங்கு யாராவது “நீங்கள் பெரியார் மண்ணில் இருந்து வந்தவர்கள் தானே?” என கேட்டால் முதலில் அரைமணி நேரம் அழுவார்கள் அதன் பின்பே பேசுவார்கள்
அவர்கள் மனதில் அவ்வளவு வலி இருக்கின்றது, தீ பட்ட காயத்தில் கொரோனா வந்து தேளாக கொட்டுகின்றது.