தியேட்டர் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தம்

திரையுலகம் என மொத்தமாக சொல்லிவிட்டாலும் ஏகபட்ட சங்கங்கள் உண்டு, அவர்களுக்குள் கும்மாங்குத்தும் உண்டு

அப்படி இப்பொழுது தியேட்டர் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்கின்றதாம்

அவர்களுக்கு வரி கட்டி முடியவில்லையாம், மிகுந்த சிரமபடுகின்றார்களாம் அதனால் வேலை நிறுத்தம் செய்கின்றார்களாம்

அதாவது தொழில் நடத்த முடியவில்லை என நிரந்தரமாக மூடவில்லையாம், மூடி எதிர்ப்பை மட்டும் காட்டிகொண்டிருக்கின்றார்களாம்

நஷ்டம் என்றால் மொத்தமாக மூடிவிட்டு செல்லலாம் அல்லவா? அப்படி நிரந்தரமாக மூடட்டும். நாட்டில் என்ன குறைந்துவிடும்?

அரசு இயங்காதா? சூரியன் உதிக்காதா? இல்லை இந்தியா அழிந்தே விடுமா? ஒன்றுமில்லை. அந்த தியேட்டர்களை மொத்தமாக மூடலாம்.

40 வருடமாக ரஜினியும் கமலும் இன்னும் பலரும் அதே நாயகர்களாக வருவார்களாம், ஆனால் குஷ்பூ வரமாட்டாராம்

குஷ்பூ நாயகியாக மின்னாத அந்த திரையரங்குகள் ஏன் திறந்திருக்க வேண்டும்? மூடி தொலையட்டும்.