திராவிடத்தின் மிக பெரிய உச்ச சாதனை இது

கார்பரேட்டுக்கள், தொழிலதிபர்கள்.. விவசாயிக்கு துரோகம் என சீறுமுன் சில விஷயங்களை அமைதியாக நோக்கலாம்

விவசாயம் ஒன்றால் தேசம் வாழமுடியாது என்பது இக்காலத்தின் நியதி, எல்லா நாடுகளும் அதைத்தான் சொல்கின்றன, தொழில் வளம் மிக அவசியம்

இப்போது உலக யதார்த்தம் இது, தொழில்வளம் ஒன்றில் வரும் வருமானத்திலே விவசாயத்தை காத்தல் வேண்டும் அல்லது முடியும்

இந்தியாவில் இதை தொடங்கி வைத்தவன் வெள்ளையன் எனினும் சுதந்திர் இந்தியாவில் அடித்தளமிட்டவர் நேரு

காரணம் வரி, அரசுக்கு வேண்டிய வரி, வருமானம்

வெள்ளையன் காலத்தில் இங்கு நெல்லுக்கும், நிலத்துக்கும் இன்னும் பலவற்றுக்கும் வரி என்றொரு கொடுமை இருந்தது, விளைச்சலில் அரைவாசி வரி என வாங்கிகொள்வான், இந்திய அரசர்கள் செய்ததை அவன் செய்தான்

சுதந்திர இந்தியா விவசாயிகளின் வறுமை கண்டு வரியினை ஒழித்தது, இன்று வரிகட்டும் விவசாயி என எவனாவது உண்டா?

ஆனால் விவசாயிக்கு மின்சாரம், எரிபொருள், உரம், இன்னும் ஏகபட்ட மானியங்கள் கிடைக்க வழி செய்யபட்டிருக்கின்றதே எப்படி?

விவசாய கருவிகளுக்கு மானியம், மின்சாதன மானியம், சொட்டுநீருக்கு மானியம் என அள்ளி கொடுக்கின்றார்களே எப்படி?

சமயங்களில் விவசாய லோன் தள்ளுபடி செய்யும் அளவு நிதி அரசிடம் இருக்கின்றதே எப்படி?

அதெல்லாம் விவசாயி கட்டும் வரி பணமா? அல்ல தொழில் நிறுவணங்களும் பெரும் கம்பெனிகளும் வியாபாரிகளும் இன்னும் பலரும் கட்டும் வரி

பெட்ரோல் லிட்டருக்கு 75 ரூபாயா … என கொந்தளிக்கின்றோமே அது எங்கே போகின்றது, இப்படித்தான்

விவசாயிக்கு அரசு வரிவிதித்தால் என்னாகும்?

ஒரு கிலோ அரிசி சில நூறுகளை தாண்டும், கத்தரிக்காய் வெண்டைகாயினை எல்லாம் இரண்டெலக்க ரூபாய்களில் வாங்க முடியாது, ஒரு கிலோ காய்கறி ஆயிரங்களை அசால்ட்டாக தாண்டும்

இந்த மானியங்களை வழங்க வரி அவசியம், அதனாலே கார்பரேட் முதல் பெட்ரோல் வரை எங்கே வரி வசூலிக்க வசதி உண்டோ, எளிதாக வசூலிக்க வசதி உண்டோ அங்கே கை வைக்கின்றது அரசு

ஒரு காப்பரேட் கம்பெனி என முழங்க தெரியுமே தவிர அவன் அளிக்கும் வேலை வாய்ப்போ, அவன் கட்டும் வரியோ அவன் மூலம் ஒவ்வொருவனும் கட்டும் வரியோ அது கொடுக்கும் வேலை வாய்ய்போ யார் கண்ணுக்கும் தெரிவதில்லை

நிதானமாக கவனித்தால் ஒன்று புரியும்

நிச்சயம் விவசாயி பாவம், அவனிடம் வரியோ இன்னும் எதுவும் வசூலிக்க ஒன்றுமில்லை, இது மன்னர் காலமுமில்லை , ஆனால் அவனிடமும் வரி வாங்கினால் இங்கே ஒரு நேர சாப்பாடு சில ஆயிரங்களை தாண்டும்

விவசாயிக்கு மானியம் இன்னும் அதிகபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது, அவன் ஊருக்கெல்லாம் சல்லி விலையில் அரிசியிம் காய்கறியும் வழங்க மானியமும் இன்னும் பல சலுகைகளும் மகா அவசியம்

ஆனால் எப்படி கொடுக்க முடியும்? பெரும் வரிகள் இன்றி அது சாத்தியமில்லை

வரி பெருக என்ன வழி உண்டோ அதைத்தான் அரசுகள் செய்கின்றன, தொழில்சாலை ஊக்குவிப்பு புதிய தொழில்கள் தொடங்க வழி , தொழில் நிறுவணங்களுக்கு சிக்கல் என்றால் அரசு தலையிடுவது எல்லாம் இந்த அடிப்படையிலே

இதை உலக் நாடுகள் எல்லாம் செய்கின்றன‌

நேரு செய்தார், காமாராஜர் செய்தார், இந்திரா என எல்லோரும் செய்தார்கள், மோடியும் அதைத்தான் செய்கின்றார்

டாட்டா நேருவுக்கு முன்பே கோடீஸ்வரன், அம்பானி இந்திரா ஆட்சிக்கு வந்த காலத்திலே கோடீஸ்வரன்

அம்பான எப்படி உருவானான்? இன்றைய ஜவுளிகடை பெரு முதலாளிகள் எப்படி உருவானார்கள்

வெள்ளையன் தன் நாட்டு துணியினை இங்கு விற்றான், இந்தியர் மானம் காக்க வாங்கபட்ட ஆடைகளின் பணம் லண்டனுக்கே சென்றது

சுதந்திர இந்தியாவில் நமக்கான துணியினை நாமே செய்தோம், அம்பானியும் செய்தான்

லண்டனுக்கு சென்ற கோடிகணாக்கான பணம் இந்தியாவுக்குள்ளே சுற்றியது, மில்கள் அதிகம் இருந்த குஜராத் அதில் தனி வளர்ச்சி பெற்றது

இந்தியரின் உடைசெலவு பணம் இந்தியாவுக்குள் சுற்றியே இன்று காணும் ஜவுளிகடல்கள் எல்லாம் உருவாயின‌

ஆங்கில ஆட்சி நீடித்திருந்தால் அது சாத்தியமில்லை

அம்பானி என ஒருவனை சாடுகின்றோம் ஆனால் அவனுக்கு கீழ் வாழ்ந்து வரிகட்டும் லட்சகணக்கான குடும்பங்களை மறக்கின்றோம்

இதோ சன்டிவி ஒரு நாளைய ஊழியர் சம்பளம் 10 கோடி என வழங்குகின்றது, அப்படியானால் மாத வருமானம் என்ன? அது கட்டும் வரி என்ன?

ஊழியர் சம்பளமே 10 கோடி எனில் சன்டிவி குழுமத்தின் ஊழியர் கணக்கு என்ன?

அம்பானி என ஓப்பாரி வைக்கும் கூட்டம் சன்டிவி என்றால் வாயினை பொத்துவது ஏன்?? இவ்வளவுக்கும் 1990க்கு பின் தொடங்கபட்டது சன் குழுமம்

நாம் சொல்ல வருவது இதுதான் தேசம் இயங்க வரி முக்கியம் வேலை வாய்ப்பு முக்கியம், அதை அரசு ஊக்குவிக்கின்றது அது மிக சரியானது

விவசாயியிடம் அது நிலவரி விளைச்சல் வரி என எதுவும் வசூலிப்பதில்லை மாறாக மானியங்களை கொடுக்கின்றது அதுவும் நல்லது

அந்த மானியம் இன்னும் பெருக வேண்டும், அதற்கு வரிகள் அதிகாகி அரசுக்கு வரவேண்டும் அப்படி வர வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவணங்களின் வரிவசூல் அதிகரிக்கபட வேண்டும், இன்னும் பெரும் தொழில் நிறுவணங்கள் பெருக வேண்டும்

திராவிட கும்பல் “ரூபாய்க்கு 3 படி அரிசி” என சொன்னபொழுது “படுபாவி பயலுவளா 3 ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் விவசாயி ஈரமண்ணையா தின்னுவான்? அவனுக்கு மானியம் கொடுக்குற அளவு தொழில் வளக்கணனும்ணேன் அரசு வருமானம் பெருகணும்ணேன்” என சொன்ன காமராஜர் எக்காலமும் மறக்க முடியாதவர்

அவர் வழிதான் மோடியின் வழியும் அதில் சந்தேகமில்லை

காமராஜர் சொன்னதை மீறி, தொழில் வளர்க்காமல் இலவச அரிசி என திராவிட கும்பல்கள் செய்ததின் விளைவு என்ன?

ஊரெல்லாம் சாராயகடை, அரசின் கடன் 4 லட்சம் கோடி

திராவிடத்தின் மிக பெரிய உச்ச சாதனை இது