திராவிட குஞ்சுகள் களைத்துபோய் திண்ணையில் மல்லாக்க கிடக்கின்றன பாவம்

அக்காலத்தில் ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே எதிரி போப்பாண்டவர், சீன கம்யூனிஸ்டுகளுக்கு எதிரி தலாய்லாமா

நம்ம ஊர் கருப்பு சட்டைகளுக்கு எதிரி காஞ்சி பெரியவர்

அதில் ரஷ்யர்கள் திருந்திவிட்டார்கள், பாதிபேர் போப் பக்கம் வந்தாயிற்று மீதி இஸ்லாமும் இந்துமதமாகவும் திரும்பியாயிற்று

சீன கம்யூனிஸ்ட் சும்மா தலாய்லாமா மேல் கம்பு சுற்றுகின்றார்கள், அவர்மேல் சிறு கீறல் பட்டாலும் சீன அரசை சீன மக்கள் சரித்துவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், இதுகாலமும் லாமா தில்லாக உலகம் சுற்ற அதுதான் காரணம்

இந்த கருப்பு சட்டைகள் சுருங்கிவிட்டன அவை அழிவின் விளிம்பில் இருப்பதால் அழுதுகொண்டிருக்கின்றன‌

இந்த திருவள்ளுவ சர்ச்சையில் காஞ்சிபெரியவர் திருகுறளை படிக்காதே என சொன்னதாக கிளம்பிவிட்டன‌

உண்மையா அது என்றால் இல்லை..

திருகுறளை சைவ சித்தாந்த கழகம் கொண்டாடியது

உ.வே சாமிநாதய்யர் எனும் பிராமணரே அச்சிக்கு கொண்டுவந்தார்

பிராமணமும் இந்துமதமுமே திருகுறளை சபை எல்லாம் வாசித்து மக்களுக்கு சொல்லிகொண்டிருந்தது

காஞ்சிபெரியவர் என்ன சொன்னாரென்றால் “ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நோக்கத்துக்கானவை வழிபாடு பாட தேவாரம் திருவாசகம் உண்டு, நீதிநெறிக்கு தனி நூல்கள் உண்டு

வழிபாட்டு நேரம் வழிபாட்டு பாடல்களை பாடுங்கள், மக்களுக்கு சொற்பொழிவு கொடுக்கும் நேரம் நீதி நூல்களை பாடுங்கள்

திருகுறளின் அறத்துபாலையும் பொருட்பாலையும் விளக்குங்கள் ,

மற்றபடி அந்த காமத்துபால் ஒரு துறவி விளக்கி சொல்ல வேண்டிய விஷயம் அல்ல, அது இல்லறத்தார் தாமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், சபையில் சொல்லுதல் சரியல்ல

அது பல சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும், ஆண் பெண் நிறைந்த கூட்டத்துக்கும் சரியல்ல, துறவிகளின் நற்பெயருக்கும் பொருந்தாது”

இவ்வளவுதான் விஷயம், அதற்குள் கருப்பு சட்டைகள் பொய்யோடு பொங்கிவிட்டன, நாத்திகத்தின் தாய்வீடான ரஷ்யாவே திருந்திவிட்டபின் இவர்களுக்கென்ன?

ஆம் அவர்கள் பேசியது உண்மையன நாத்திகம் அதனால் திருந்தினார்கள்,

இது அன்றிலிருந்தே கள்ளதனமான நாத்திகம் அதனால் ஒருகாலமும் திருந்தபோவதில்லை..

போப்பாண்டவரை ஒழித்தால் கிறிஸ்தவத்தை ஒழிக்கலாம் என கனவு கண்டு முயற்சி செய்து தோற்றுவிட்டது ரஷ்யா

சீனா தலாய்லாமாவினை ஒழித்துவிட்டால் புத்த‌ மத அடையாளத்தையே சீனாவில் ஒழித்துவிடலாம் என கனவு கண்டு ஆடிவிட்டு ஓய்ந்துவிட்டது, அம்மதம் அழிக்க முடியாதது என்பதை உணர்ந்து பாட்டை மாற்றிபாடுகின்றது

இந்த காஞ்சிபீடத்தை ஒழித்துவிட்டால் பிராமணனோடு இந்துமதத்தையும் புதைத்துவிடலாம் என களமாடிய திராவிட குஞ்சுகள் களைத்துபோய் திண்ணையில் மல்லாக்க கிடக்கின்றன பாவம்