திராவிட சூது என்றால் இதுதான்

நாமும் இந்த சங்க இலக்கியம் முதல் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி வரை பார்க்கின்றோம்

அட தமிழில்தான் இல்லை என்றால் மாயன், செவ்விந்தியர், இன்கா தொடங்கி அப்படியே ஐரோப்பாவின் வைக்கிங் குடிகளின் தொல்பொருட்கள் பார்த்துவிட்டு, எகிப்தின் பிரமீடுக்குள் தேடிவிட்டு இந்த மம்மிகள் உடலில் எல்லாம் தேடிவிட்டு அப்படியே பாபிலோன் நாகரீகம், சிந்துவெளி நாகரீகம் இந்த சீன நாகரீகம் ஜப்பானிய தொடக்க கால புதைபொருட்கள் என எல்லாம் சுற்றிவிட்டு வந்தால் “திராவிடம்” என்றொரு வார்த்தையினையினை காணோம்

அட அது உலகிலும் இல்லை, தமிழிலும் இல்லை, தமிழக ஆலய கல்வெட்டிலும் இல்லை எதிலுமே இல்லை

ஓலை சுவடியிலும் இல்லை, குகையில் இல்லை, எங்குமே 200 ஆண்டுக்கு முன்பான அடையாளம் எதிலியுமே திராவிடம் இல்லை

கன்னடனிடம் கேட்டால் கடிக்க வருகின்றான், மலையாளிடம் கேட்டால் மிதிக்க வருகின்றான், தெலுங்குகாரனிடம் கேட்டால் பாலகிருஷ்ணா படம் போட்டு காட்டிவிடுவேன் ஓடிவிடு என்கின்றான்

தமிழிலில் திரிகடுகம் என்றொரு பாடல் உண்டே தவிர திராவிடம் இல்லை

முதலில் அதை சொன்னவன் வெள்ளையன் கால்டுவெல், எங்கிருந்தோ வந்த அவனுக்கு இதுபற்றி எந்த பெரியார் போதித்தானோ தெரியவில்லை, அவன் கண்ட திரித்துவத்தை திராவிடம் என சொல்லிவிட்டானோ என்னவோ?

அதன் பின் அதை பிடித்தது பெரியார் கோஷ்டி, நீதிகட்சி கூட அதை தொடவில்லை அது அர்த்தமற்றது என விட்டுவிட்டது

ஆக 150 ஆண்டு கூட வரலாறு இல்லாத வெறும் வெற்று வார்த்தையான, மாயமானான அந்த திராவிட வார்த்தையினை வைத்து கொண்டு பல்லாயிரம் ஆண்டு தமிழின வரலாறை சொல்ல வருகின்றன ஏமாற்று பேர்வழி கோஷ்டி

திராவிட சூது என்றால் இதுதான், இதுவேதான்…