திராவிட தன்மான தமிழரின் அரசியல் நாகரீகம்

அந்த சுஷ்மா அன்று வாஜ்பாயின் அமைச்சரவையில் திமுகவோடு பங்கெடுத்திருந்தார்

மத்திய வெளியுறவுதுறை அமைச்சராக எத்தனையோ தமிழர்களை வெளிநாட்டில் இருந்து மீட்டு தாயகம் திருப்பினார்

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டை தடுத்ததில் அவருக்கு மகாமுக்கிய பங்கு உண்டு

அப்படிபட்ட ஒரு மகராசிக்கு பெரும் அஞ்சலியினை தமிழக கட்சிகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை, அதிமுக மட்டும் உரிமையோடு அழுதிருக்கின்றது

ஆம் முன்பு கலாமுக்கு ஜெயா வராத நிலையில் பன்னீர்செல்வம் வந்தார், இப்பொழுதும் அவர்தான் அழுகின்றார்

மனிதர் அப்பழுக்கற்ற தேசியவாதி போல..

திமுக மற்றும் தமிழ்தேசிய இம்சைகள் சத்தமே இல்லை, அவர்கள் இலங்கையில் யாரும் செத்தால் அல்லது வடநாட்டில் யாராவது பாஜகவினரால் கொல்லபட்டால் மட்டும் அழுவார்கள்

திமுக சுஷ்மாவோடு முன்பு ஆட்சியில் இருந்த கட்சி எனும் வகையில் அதன் எம்பிக்கள் சென்றதாகவோ அஞ்சலி செலுத்தியதாகவோ இரங்கல் தெரிவித்ததாகவோ தகவலில்லை

திராவிட தன்மான தமிழரின் அரசியல் நாகரீகம் அப்படி இருக்கலாம்