திராவிட பலூன்

இதோ திராவிட பலூன் பெரியார் ஊதி, அண்ணா ஊதி உருவாக்கபட்ட திராவிட, தமிழர் மூச்சு பலூன்

தனி தமிழ் மூச்சு பலூன், சுயாட்சி பலூன்

அம்மையார் துர்கா வைத்திருக்கும் பலூன் கலைஞரின் மூச்சு காற்றினால் ஊதபட்டது, கடைசி இரு வருடமாக தலைவர் அவர்கள் மூச்சினை இப்படித்தான் பாதுகாத்தோம்.

ஆக அதை ஏலம் விடுகின்றோம்.. தமிழுக்காக தமிழருக்காக வாழ்ந்த தலைவர் டாக்டர் கலைஞரின் மூச்சு நிரம்பிய பலூன்..

ஒரு பலூன் 2 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்… ஏலம் ஒருதரம்..

// சென்னையில் குடிநீர் இல்லை இன்னும் ஏராளமான இல்லைகள்

நிச்சயம் பழனிச்சாமி அரசு சரியில்லைதான், ஆனால் மக்கள் யாரை மாற்றாக நம்புகின்றார்கள்? யாருக்கு இந்த தேர்தலில் அள்ளி கொடுத்தார்கள்?

அவர்கள் இந்த இக்கட்டான நேரத்தில் போராட களத்திற்கு வராமல் ஜாலியாக சிங்கப்பூரில் பலூன் விற்றால் என்ன நியாயம்?

திராவிட நியாயமாக இருக்கும் போலிருக்கின்றது.

என்ன விசித்திரமோ தெரியவில்லை, அறிவாலயத்தில் எல்லா நிற பலூன்களும் இருக்கலாம்

மோடிக்கு கருப்பு பலூன், இப்பொழுது கலர் பலூன் என வகைவகையான பலூன்களை வைத்திருப்பார்கள் போல‌.” //