தில்லி தமிழ் நாடு இல்லங்கள் பெயர் மாற்றம்…

இந்த பாஜக செய்யும் பெயர் மாற்றி விளையாடும் விளையாட்டிற்கு டெல்லி தமிழ்நாடு இல்லமும் தப்பவில்லை

அதாகபட்டது பொருளாதார சிக்கலா? பண நோட்டின் கலரை மாற்று, பாஸ்போர்ட் சிக்கலா? அதன் கலரை மாற்று இப்படி பெயின்ட் அடித்துவிளையாடும் ஆட்சி பாஜகவுடையது, நியுமராலாஜி போல கரலாலாஜி எனும் நம்பிக்கையில் ஆண்டு கொண்டிருப்பவர்கள்

அப்படிபட்டவர்கள் கண்ணில் டெல்லி தமிழ்நாடு இல்லம் பட்டிருக்கின்றது. எல்லா மாநில முதல்வரும் தங்க டெல்லியில் வீடு உண்டு அப்படி தமிழக முதல்வர் தங்கும் இல்லம் தமிழ்நாடு இல்லம் என அழைக்கபட்டது

அது எப்படி நாட்டிற்குள் ஒரு நாடு? என அன்றே தமிழத்தைகுறித்து வைத்த கும்பல் இப்பொழுது கலைஞர் இன்றி, ஜெயா இன்றி தன் வாட்ச்மேனை ஆளவிட்டிருக்கும் நிலையில் விடுமா?

தமிழ்நாடு இல்லம் என்பதை தமிழ்நாடு அரசாலே தமிழ் இல்லம் என மாற்ற வைத்தார்கள், புதிய வீடு பொதிகை தமிழ் இல்லலாம், பழைய வீடு வைகை தமிழ் இல்லமாம்

கொஞ்சமேனும் சிந்தித்தார்களா?

பொதிகை மலையில்தான் தமிழ் பிறந்தது, அதனால் பழைய இல்லம்தாம் பொதிகை இல்லமாக இருந்திருக்க வேண்டும், பழனிச்சாமியிடம் இதெல்லாம் எதிர்பார்ப்பது ஷகிலா ஏன் சாவித்திரி போல் நடிக்கவில்லை என்பதற்கு சமம்.

இப்படி தமிழ்நாடு இல்லம் , தமிழ் இல்லம் என பழனிச்சாமி அரசு மாற்றினாலும் தமிழகம் விடுமா? கண்டனம் பறந்தது

உடனே பழைய வீடு வைகை தமிழ்நாடு இல்லம் எனவும், புதிய வீடு பொதிகை தமிழ்நாடு இல்லம் எனவும் மாற்றபட்டதாக தமிழக அரசு சொல்லிகொள்கின்றது

நல்ல வேளையாக ராமசந்திரன் தமிழ்நாடு இல்லம், ஜெயா தமிழ்நாடு இல்லம் எனவும் பெயர் வரவில்லை என்பதால் மகிழ்ச்சி

இதிலும் பாருங்கள் ஒரு விஷயம் கவனிக்க வேண்டியது

வைகையும், பொதிகையும் தமிழக அடையாளங்கள் வைத்தாயிற்று, ஆனால் காவேரி பெயரே இல்லை

ஆக காவேரி தமிழக அடையாளம் அல்ல என தமிழக அரசே முடிவு செய்துவிட்டது போல, இதனை கேட்க தமிழகத்தில் யாருமே இல்லை

உடனடியாக பழைய இல்லத்திற்கு கல்லணை தமிழ்நாடு இல்லம் எனும் பெயரையும் புதிய இல்லத்திற்கு காவேரி தமிழ்நாடு எனும் பெயரையும் சூட்ட குஷ்பு ரசிகர் சங்கம் கோரிக்கை வைக்கின்றது