தி.மு.கவிற்கு போட்டியாக நாங்களும் மாநாடு நடத்துவோம் : தமிழிசை
தி.மு.கவிற்கு போட்டியாக நாங்களும் மாநாடு நடத்துவோம் : தமிழிசை
புலியினை பார்த்து பூனை சூடு போடலாம், ஆனால் அதிகமாக போட்டால் செத்துவிடும்
ஏற்கனவே ஒருமுறை அமித்ஷா வந்தபொழுது வந்திருந்த கூட்டம் அவர் தலைமுடியினை விட குறைவாக இருந்ததை எண்ணி முட்டி முட்டி அழுத அமித்ஷா அதன் பின் தமிழக பக்கமே வரவில்லை.
இதில் என்ன பாஜக மாநாடு?
ஆனால் உங்கள் மாநாட்டுக்கு சிக்கலே இல்லை அம்மணி , கமலாயலத்தில் 10 சேர் 1 மேஜை போட்டு எளிதாக நடத்திவிடலாம்
கடப்பாரை கொண்டு நெம்பினாலும் ஆட்சி கவிழாது : பழனிச்சாமி
பின்னே? எவ்வளவு பணம் செலவழித்து திண்டுக்கல் லாக்கர் போல கட்டி வைக்கபட்டிருக்கும் எம்.எல்.ஏக்கள் அவர்கள்?
கடப்பாரைக்கு எல்லாம் அசந்துவிடுவார்களா?
சிலுவையிலே அறைந்தால் கூட பாஷா ரஜினி போல சிரித்துகொண்டே சம்பாதிக்கும் வித்தகர்கள் அவர்கள், அவர்கள் ஆட்சி கலைக்க முன்வரமாட்டார்கள் என்பது பழனிச்சாமிக்கு தெரியாதா?