தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல
“தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல; விநாயகர் போற்றி, முருகன் போற்றி, திருமால் போற்றி, சிவன் போற்றி புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி,” என தி.மு.க., தலைவர் ஸ்டாலின்…
தேர்தல் ஒரு கட்சி தலைவரை இப்படி எல்லாம் பொய் சொல்ல வைக்குமா?
திராவிட நாடு பத்திரிகையினை விடுங்கள் “அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே” என் பரபரப்பு வாழ்க்கையினை தொடங்கினார் கலைஞர்
புராணங்களும் இதிகாசங்களும் அவரிடம் படாதபாடு பட்டன
ராமனின் கதை என இலக்கிய சுவை மிகுந்த கம்பராமாயணத்தையே அவர் அதிகம் பேசவில்லை
திருகுறளில் கூட வரும் இந்திரன், அந்தணன் வேதம் போன்ற வார்த்தைகளை லாவகமாக பகுத்தறிவு வார்த்தைகளாக்கிய வித்தகர் அவர்
இந்து கடவுள்களை எல்லாம் மிதித்து தான் ஏறும் படிகட்டாக பயன்படுத்தினார்
எவ்வளவு ஏளனம்? எவ்வளவு கிண்டல்? எவ்வளவு கேலிகள்?
ஒன்றா இரண்டா? ராமனும் கண்ணனும் ஐயப்பனும் இன்னும் பலரும் அவரிடம் அவ்வளவு பாடுபட்டனர்
பாஞ்சாலி அவரால் பலமுறை துகிலுரியபட்டாள், சீதை தீயினுள் சென்றுவிட்டு இவர்களால் திரும்ப வரவே இல்லை அவ்வளவு அவமான கேள்விகள்
ஆனால் ஆட்சிக்கு வந்தபின் கொஞ்சம் நிதானமானார், அதுவும் ராமசந்திரன் பிரிவுக்கு பின்னும் ஜெயா எனும் பிராமணத்தி தன் சரிநிகர் தலைவி ஆனபின் அவரிடம் மாற்றம் இருந்தது
அப்பொழுதும் வீரமணி சுபவீ போன்ற தன் கட்சியின் “சி” பிரிவின் மூலம் இந்துக்களை சீண்ட அவர் தயங்கவில்லை
வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவரே இறங்கி அடித்தார் “இந்துக்கள் என்றால் திருடர்கள்” “ராமன் எந்த காலேஜில் படித்தான்” என கடைசி வரை அவர் தன் அடிநாத கொள்கையினை விடவில்லை
அவருக்கு விவேகானந்தர் மேல் ஒரு மதிப்பு இருந்தது அவரையும் மதவாதியாக பார்க்கவில்லை துணிச்சல் மிக்க சீர்திருத்தவாதி என சொல்லிகொண்டார், அப்படி விவேகானந்தர் என்ன சீர் திருத்தினாரோ அவருக்கே வெளிச்சம்
எல்லா மனிதனும் கடைசி காலத்தில் கடவுளின் காலடிக்கு வருவது போல ஆடி அடங்கிவிட்டு ராமனுஜர் வாழ்வினை எழுதினார் அப்படியே அவர் காலம் முடிந்தது
இந்துக்களை சீண்டி தன்வாழ்வினை தொடங்கிய கலைஞர் ராமானுஜர் வாழ்வினை படித்தபடி முடித்தார்
ஆக அவர் எங்கே முருகன் போற்றி, விநாயகர் போற்றி இன்னும் பல தெய்வங்கள் போற்றி என வெளியிட்டார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை
ஒரு சாதாரண மனிதன் அது நடிகர் பார்த்திபனோ இல்லை யாருமோ புத்தகம் எழுதி அவரை வெளியிட்டுவிழாவுக்கு அழைத்தால் அப்புத்தகத்தை கவனமாக படித்து அதைபற்றி பிரமாதமாக ரசிக்க ரசிக்க பேசுவது கலைஞர் ஸ்டைல்
பலமுறை படித்துவிட்டு மிக தயாராக வருவார், அதை படித்து தன்னை புதுபித்தும் கொள்வார்
ஆனால் இப்படி இந்துமத புத்தகத்தை வெளியிட்டு என்றாவது பேசகண்டோமா?
இல்லை ஒரு காலமும் இல்லை
முக ஸ்டாலினின் மொக்கைகள் அதிகமாகிகொண்டே செல்கின்றன, இதை சும்மா விட முடியாது
இனி அண்ணியார் துர்கா அம்மையாரிடம் புகார் அளிக்க சங்கம் முடிவு செய்திருக்கின்றது
இனி சிறையில் இருந்து சசிகலா வந்தவுடன் அரசியல் களம் சசிகலா X துர்கா என்றுதான் மாறும் போல
துர்கா அம்மையார் தன் மாமனாரிடம் அரசியல் கற்று தன் கணவன் மூலமும் மகன் மூலமும் பரிசீலிக்கும் மாபெரும் சாமார்த்தியக்காரர்
இனி அவரிடமே புகாரளித்து இந்த மொக்கை ஸ்டாலினின் அட்டகாசத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்