தி.மு.க என்ற கட்சியே இருக்க கூடாது : சசி ஆவேச பேச்சு
தி.மு.க என்ற கட்சியே இருக்க கூடாது : சசி ஆவேச பேச்சு
ஏம்மா..உனக்கு ஏதாவது வரலாறு தெரியுமா? எழுதபடிக்கவாவது தெரியுமா?
ஆனானபட்ட இந்திரா முதல் எத்தனை பேர் அப்படி மல்லுகட்டி இறுதியில் தோற்றார்கள் தெரியுமா?
ஏன் உங்கள் “அழகுகுரு” எம்ஜிஆரால் கூட அதனை செய்ய முடியவில்லையே
எத்தனை பெரும் புயல்களை கடந்து நிற்கும் அந்த ஆலமரத்தினை இந்த சொகுசு காரின் மின்விசிறிகாற்று சாய்த்துவிட முடியுமா?
அல்லது நீங்கள் ஊதி அது சரிந்துவிடுமா?
ஏதோ வோட்டு வாங்க இப்படி எல்லாம் பேசினால் பரவாயில்லை, சிறைக்கு செல்லும்பொழுதும் இப்படி பேசினால் என்ன அர்த்தம்?
முற்றிவிட்டது என அர்த்தம்
அதிமுகவின் அந்திம காலத்தில் இப்படியான உளறல்கள் வருவது சகஜம் தான்..
உலகெல்லாம் காலண்டரை கிழித்து முன்னே சென்றுகொண்டிருக்க, ஜெயா டிவி மட்டும் இறந்த காலத்திற்கு செல்லும் டைம் மெசினில் ஏறி பின்னோக்கி செல்கிறது
கடந்த வாரத்து செய்தியினை நேற்று விலா வாரியாக சொன்னார்கள், தீர்ப்புபற்றியோ சின்னம்மா களி திங்க போவது பற்றியோ ஒரு வரியுமில்லை
ஆக ஒரு வாரம் முன்னால் சென்றுவிட்டார்கள், இன்னும் 3 மாதம் முன்னால் செல்லாமல் இருந்தால் நல்லது
அப்படி சென்றால் முதல்வர் ஜெயலலிதா அதிரடி உத்தரவு, மக்கள் மகிழ்ச்சி என சொல்ல நேரிடும், இவர்கள் சொல்வார்கள்
ஆக ஜெயாடிவி ஏறி பயணிக்கும் அந்த டைம் மெசினை நிறுத்தவேண்டும்.
ஒரு டிவியினை ஒழுங்காக நடத்தமுடியாதவர்களா கட்சி நடத்திவிட போகின்றார்கள்?
கோயபல்ஸ் ஹிட்லரோடு காணமல் போனது போல, ஜெயா டிவி சின்னமாவோடு போக போகின்றது என்பது மட்டும் உண்மை.
எடப்பாடி பழனிச்சாமி கும்பலுக்கான கட்சியின் தலமை அலுவலகம்.
சின்னம்மா பேனர் ஏதும் வைத்தால் கன்னட அரசு பிய்த்துவிடும் என்பதால் அந்த ஆபத்து எல்லாம் இல்லை
