தீவிரவாதிகளை ஒடுக்குவதிலுமா மத வேற்றுமை?
காஷ்மீர் தீவிரவாதிகள் புல்வாமாவிலும் மும்பையிலும் டெல்லியிலும் தாக்கினால் அது இஸ்லாமிய தீவிரவாதம், பாகிஸ்தான் ஒழிக்கபடவேண்டும் இஸ்லாம் முடக்கபடவேண்டும் என பொங்கும் யாரையும் நீவிர் மாவோயிஸ்ட் விஷயத்தில் காணவே முடியாது
ஆம் மாவோயிஸ்ட் தாக்குதல் என்றால் இத்தேசம் மிக அமைதியாக கடந்து செல்கின்றது
இத்தனைக்கும் இங்கு மிக கொடிய தீவிரவாத அமைப்பு அதுதான்
இதை யாரும் சீன தூண்டுதல் பயங்கரவாதம், நேப்பாளம் தூண்டிவிடும் பயங்கரவாதம் என சொல்வதே இல்லை
ஒரு வாதத்திற்கு பாருங்கள், எவனோ ஒரு இஸ்லாமியன் செய்யும் தகாத செயலால் மொத்த இஸ்லாமும் தீவிரவாத இயக்கம் என பொங்குவார்கள்
ஆனால் ஒடுக்கபட்டோர், விவசாயி தொழிலாளி சார்பாக நாங்கள் கொல்கின்றோம் என மாவாயிஸ்ட் சொன்னால் சத்தமே இல்லை
இலங்கையில் குண்டுவெடித்தால் கூட இஸ்லாமிய தீவிரவாதம் என்பதும், காஷ்மீரில் வெடித்தால் பாகிஸ்தான் மேல் குண்டுவீசுவோம் என்பதும் ஒருவகை
ஆனால் மாவோயிஸ்டுகள் என்றால் மர்ம அமைதி காப்பதும் நேபாளம் சீனா பர்மா என எல்லை தாண்ட வேண்டிய நேரத்தில் கனத்த அமைதி காப்பதும் சரியல்ல
அட நேபாளத்திற்குமா இந்தியா அஞ்சவேண்டும்?
பாகிஸ்தானை அடிப்பார்களாம் ஆனால் இத்துபோன நேபாளத்திற்கு பின் வாங்குவார்களாம்
காரணம் என்ன என நினைக்கின்றீர்கள்?
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, ஆனால் நேபாளம் இந்து நாடு, சீனா பொதுவுடமை நாடு
ஆக இந்து நாடும் பொதுவுடமை நாடும் இங்கு என்ன தீவிரவாதம் வளர்த்துவிட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்
ஆனால் பாகிஸ்தான் வளர்த்தால் பொறுக்கமாட்டார்கள்
இதெல்லாம் என்னவகை நியாயம்? என்னவகை பாதுகாப்பு என்பதெல்லாம் நல்ல இந்தியருக்கே புரியவில்லை
புலவாமா தாக்குதல் என்றால் பொங்கிய இந்திய ராணுவத்தின் தாக்குதல் மாவோயிஸ்டுகள் என்றால் முடங்குவது ஏன்?
அட தீவிரவாதிகளை ஒடுக்குவதிலுமா மத வேற்றுமை?
இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றால் வரிந்து கட்டி அடித்து அதை அரசியலாக்குவதும் , மாவோயிஸ்ட் என்றால் மவுனமாக கடந்து செல்லும் இந்த அயோக்கியதனத்தை மகா வன்மையாக கண்டிக்கின்றோம்
இனியாவது மத துவேஷம் பார்க்காமல் தீவிரவாதிகள் எனும் ஒற்றை புள்ளியில் எல்லா இம்சைகளையும் தேசம் மொத்தமாக ஒழிக்கட்டும்