தும்பிகளுடன் பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமானது

தும்பிகளுடன் பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமானது

“ஏண்டா உங்க இலக்கு இனவிடுதலை

ஆமாண்ணே இனம்ணே காப்பாத்தணும்ணே

இந்தியா உங்களுக்கு ஏற்புடையது அல்ல, ஈழ அழிவுக்கெல்லாமும் தமிழக சீரழிவுக்கெல்லாம் இந்தியா காரணம்

கண்டிப்பாண்ணே இப்படித்தான் உண்மை சொல்லணும்

பின்ன ஏன் இந்த எம்பி தேர்தலில் நிற்கின்றீர்கள்? டெல்லிக்கு சென்று என்ன செய்வீர்கள்?

அண்ணே இது உரிமை மீட்புண்ணே டெல்லிய ஆட்டிருவோம்

சரி அதெல்லாம் அப்புறம்டா அங்க போய் என்ன செய்வீங்க?

கச்சதீவு மீட்பு , அணுவுலை முடக்கம் இப்படி எல்லாம் டக்கு டக்குன்னு செய்வோமுண்ணே, காவேரில நீர் இல்லண்ணா அலறவிடுவோம் மத்த பயலுக மாதிரி கிடையாது , விவசாயி வாழணும்னே

எப்படி அலறவிடுவ அத சொல்லு

பாராளுமன்றத்துல கத்துவோம்

வழக்கம் போல கண்டுக்கல என்ன செய்வ‌

ம்ம்ம் ரோட்டில உருளுவோம்

அய்யாகண்ணு அம்மணமா உருண்டும் ஒண்ணும் ஆகல‌

அப்போ கேஸ் எல்லாம் போடுவோம்

அதான் திமுக அதிமுக எல்லாம் கேஸ் நடத்திச்ச, நீங்கதான கிண்டல்லாம் பண்ணீங்க திரும்பவும் கேஸுண்ணா நீங்க எதுக்கு? உங்க ஸ்பெஷல் என்ன அத சொல்லு

தனி நாடு கேட்போம்ணே

உடனே கிடைச்சுரும்டா

இல்லண்ணே அப்படி மிரட்டுவோம் இந்தியா பயந்து எங்க காலுக்கு வந்திரும்..

அட கிறுக்கு பயல தனிநாடுன்னாலும் காவேரி இந்தியாவுல்தான இருக்கும், படை எடுப்பியா?

இல்ல சர்வதேச நீதிமன்றம் போவோம்

அதுக்கு டெல்லி கோர்ட்டே பரவால்ல, சரி கச்சதீவு எப்படி மீட்கபோறீங்க சொல்லு

இப்போ சொன்னமாதிரிதாண்ணே

இது எல்லா கட்சியும் செய்றத்தான அழுத்தம், வலியுறுத்தல் கோரிக்கை, முடியா பட்சத்தில் வழக்கு , உங்க ஸ்பெஷல் என்னடா?

அண்ணே நாங்க கேட்டது நடக்கலைன்னா உடனே செத்துருவோம்

ஒஹோ இவ்வளவு செலவு பண்ணி தேர்தல் நடத்தி உங்கள டெல்லிக்கு பேச அனுப்பினா செத்துருவீங்க‌

பின்ன பதவில இருந்து எதுக்குண்ணே

அப்போ பதவிக்கு வராமலே செத்துரு”