துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் மோதல் முற்றுகின்றது

துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் மோதல் முற்றுகின்றது

அதாகபட்டது ஏற்கனவே முறுகலில் இருந்த துருக்கி அமெரிக்க உறவு இன்னும் மகா மோசமாகின்றது

ஆயிரம் காரணம் இருந்தாலும் இப்பொழுது அவர்கள் மோதிகொள்ளும் காரணம் இரண்டு

முதலாவது காரணம் துருக்கி இஸ்லாமிய நாடு ஆயினும் கிறிஸ்தவ அடையாளங்கள் அங்கு நிரம்ப உண்டு, அப்போஸ்தலர் பணி எனும் பைபிளின் அதிகாரம் சொல்லும் 7 சபைகள் அங்குதான் இருந்தன‌

எபேசு பட்டினம் இன்னபிற பட்டினம் எல்லாம் அங்குதான் இருந்தது, இதனால் கிறிஸ்தவர்களுக்கு அது வாடிகன் , ஜெருசலேம் போலவே ஒரு புண்ணிய பூமி

அதுவரை அந்த இடங்களை மீட்க வேண்டும் என்ற குரல் வரும் போகும், ஆனால் அதிர்வு இருக்காது

இப்பொழுது டிரம்ப் அப்படிபட்ட கிறிஸ்தவ பாதிரி ஒருவரை அமெரிக்காவில் அடைக்கலம் கொடுத்து துருக்கிக்கு எதிராக பேச வைக்கின்றார், துருக்கி அவரை ஒப்படைக்குமாறு கேட்கின்றது, டிரம்ப் மறுக்கின்றார்

அடுத்த காரணம் துருக்கி நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய நாடு, நேட்டோ நாடுகளுக்கு துருக்கி இருக்க வேண்டுமே தவிர வலுவான துருக்கி அதிபர் இருக்க கூடாது

ஆனால் எர்டோகன் என்பவர் இரும்பு தலைவராக புட்டீன் போல அமர்ந்துவிட்டார், அவருக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த ராணுவபுரட்சியும் தொல்வி

இப்படி பல காரணங்களுக்காக தொடங்கிய முறுகல் பொருளாதார தடைவரை சென்று துருக்கி நாணய மதிப்பும் சரிந்தது

பதிலுக்கு துருக்கி அமெரிக்க பொருட்களை விரட்டியது, சில பொருட்களுக்கு கடும் வரி விதித்தது

இந்நிலையில் துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் துப்பாக்கி சுட்டுக்கு இலக்காகியுள்ளது

இது துருக்கி சதி என அமெரிக்காவும், பக்ரித் பண்டிகையினை கெடுத்து கலவரம் ஏற்பட அமெரிக்காவே செய்த சதி என துருக்கியும் குற்றம்சாட்டி வருகின்றது

ஈரான் போல துருக்கியும் சுத்தமாக அமெரிக்க தொடர்புகளை முறிக்கும் நேரம் நெருங்குவது போல் தெரிகின்றது

அமெரிக்கா சும்மா விடுமா?

சிரியாவிலும் அமைதி திரும்பிவிட்டது, துருக்கியும் வாலாட்டுகின்றது

இரு நாடுகளுக்கும் தலைவலி ஏற்படுத்தும் விவகாரம் ஒன்றை கிளப்பிவிட்டால் அடுத்த ஆட்டத்தை அமெரிக்கா ஆரம்பிக்கலாம்

அது குர்து விவகாரம், அதை கிளப்பினால் துருக்கி நிச்சயம் சீறும், சிரிய பதறும்

தனக்கு அனுகூலம் ஏற்பட எத்தனை லட்சம் மக்கள் செத்தாலும் கவலைபடாத நாடு அமெரிக்கா

அடுத்து எதுவும் நடக்கலாம்