தூத்துக்குடி தொகுதி நிலை
தூத்துகுடியில் தமிழிசை போட்டியிட வாய்ப்பு : செய்தி
அக்கா தமிழிசைக்கு தேர்தல் போட்டி புதிதல்ல, ஏற்கனவே 2006ல் நாடார்கள் நிரம்பிய ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அக்கா போட்டியிட்டு பெற வேண்டிய தோல்வியினை பெற்றார்
இவ்வளவிற்கும் குமரி அனந்தனுக்கு தனி செல்வாக்கு கொண்ட தொகுதி அது, ஆனால் அம்மக்கள் அக்காவினை பிரதலாகனின் பெண் வடிவமாகவே கண்டார்கள்
2011ல் அக்கா வேளச்சேரியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு அதே தோல்வியினை சரியாக பெற்றது
2009 பாராளுமன்ற தேர்தலில் வட சென்னையில் போட்டியிட்டு தோற்று வழக்கம் போல் சிரித்தும் கொண்டார்
இந்த எல்லா தேர்தலிலும் அக்கா வாங்கிய வோட்டு 5% தாண்டவில்லை என்பதுதான் மிக சிறப்பான விஷயம்.
இம்முறை தூத்துகுடிக்கு வருகின்றார் அக்கா..
அங்கே கனிமொழி ஏற்கனவே தயாராக இருகின்றார், திமுகவுக்கு மிக வலுவான தொகுதி என்பதால் கனிமொழி வெற்றி நிச்சயம்
கனிமொழி நேரடி தேர்தலில் பங்குபெறும் முதல் தேர்தல் இது, இதுவரை தந்தைதான் ராஜ்யசபா எம்பியாக இவரை அனுப்பினார்
தந்தையோடு அந்த வாய்ப்பு போயிற்று என கருதும் கனிமொழி நேரடியாக களமிறங்க மிக பாதுகாப்பான தொகுதிக்கு வந்துவிட்டார்
வெற்றி என்னமோ நிச்சயம் கனிமொழிக்குத்தான் என்றாலும் அக்காவின் காமெடிக்கு மட்டும் குறைவிருக்காது என்பது நிச்சயம்
ஆனால் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக அப்பக்கம் பல இடங்களில் வந்திருந்தது
அந்த வோட்டு இப்பொழுது அதிமுக பலத்தோடு தமிழிசைக்கு கிடைத்தால் மிகபெரும் பலமாகும்
ஆனால் திமுகதரப்பு விடுமா?
குடும்பத்தில் ஒருவர் பாஜகவுக்கு ஆதரவளித்தால் என்னாகும் என்பதற்கு நானே சாட்சி, மகளை பெற்ற அப்பாவுக்கே பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என தெரியும் என குமரி அனந்தனை களத்திற்கு கொண்டு வந்தால் போதாதா?