தென்கொரியாவின் ராணுவமும் அமெரிக்க கட்டுப்பாடே

பன்னீர் செல்வம் பழனிச்சாமி கோஷ்டியும், தினகரன் கோஷ்டியும் ஒரு மாதிரி சுற்றி சுற்றி வந்து மோத தயாராவது போல இந்த வடகொரியாவும் அமெரிக்காவும் சுற்றி திரிகின்றன‌

வடகொரியாவோ கொஞ்சமும் அசையாமல் அதே ஏவுகனை சோதனையினை செய்துகொண்டே இருக்கின்றது , அமெரிக்காவோ கடும் பொருளாதார தடைகளை ஏற்படுத்தியாயிற்று

வடகொரியா விவகாரத்தில் கடும் அச்சத்தில் இருப்பவை ஜப்பானும், தென்கொரியாவும்

ஜப்பான் இரண்டாம் உலகபோரின் முடிவிலே ராணுவத்தை கலைத்துவிட்ட நாடு, இப்போது பெயருக்கு சிறிய ராணுவம் உண்டு, பழைய ஜப்பானாக இருந்திருந்தால் இந்நேரம் வடகொரியா என்ன சீனாவினையே மிதித்து எறிந்திருப்பார்கள். அவர்கள் பாதுகாப்பு எல்லாம் அமெரிக்க வசம்

அவர்கள் இப்பொழுது பாஷா அல்ல, அமைதியாக வன்முறை தவிர்த்த மாணிக்கம், ஆனால் கட்டி வைத்து அடிவாங்க தயாரில்லை என சொல்லிவிட்டார்கள்

தென்கொரியாவின் ராணுவமும் அமெரிக்க கட்டுப்பாடே

ஆக ஜப்பான், தென்கொரிய நாடுகளில் அமெரிக்க முகாம் உண்டு, அவைகளை வடகொரியா தாக்கினால் இந்நாடுகளுக்கும் அழிவு.

வடகொரியாவின் குறி இந்த ராணுவ முகாம்களே அன்றி வேறல்ல, இது அமெரிக்காவிற்கும் தெரியும்

உங்களுக்காக நாங்கள் சாகவேண்டுமா அந்த வெள்ளை குடமிளாகாயினை ஏதாவது செய்யுங்கள் என கண்ணை கசக்குகின்றன ஜப்பானும், வடகொரரியாவும்

இதனால் அமெரிக்கா சில காரியங்களில் இறங்குகின்றது அதில் ஒன்றுதான் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்க கூட்டு பயிற்சியினை தொடங்கிவிட்டது

இனி போர் வெடிக்கலாம் என்ற நிலையில் அட்டகாசமாக வந்து நிற்கின்றது ரஷ்யா

ரஷ்யா மிகபெரிய நாடு என்பதால் வடகொரியா அதன் அண்டை நாடு ஆகின்றது, என்பதால் அதுவும் வாய்திறந்துவிட்டது

வடகொரியா அத்து மீறி அணுகுண்டு செய்திருக்கலாம், ஆனால் இதனை எல்லாம் பேசிதீர்க்கவேண்டும், சும்மா அமெரிக்கா போர்பயிற்சி என கிளம்பினால் அது கோபமூட்டும்,அது நிலமையினை மோசமாக்கும்

அப்படி யுத்தம் வெடித்தால் ரஷ்யா பார்த்துகொண்டிருக்காது, அதனால் எல்லோரும் அமைதியாய் சூழலை கையாள்வது நல்லது”

இந்த அறிவிப்பு வந்தவுடன் அமெரிக்க முகாம் இடிவிழுந்த பாம்பு கூட்டம் போல் அலறி நிற்கின்றது, ஆம் இது சாதாரண அறிவிப்பு அல்ல‌

வடகொரியாவிற்கு நாங்கள் இருக்கின்றோம் என்பது போன்ற அறிவிப்பு

ஏன் இப்படி செய்கின்றார்கள் ரஷ்யர்கள்?

ரஷ்யாவின் மேற்குபகுதியில் சில நாடுகளை அமெரிக்கா வளைத்து ரஷ்யாவிற்கு எதிரான ஆயுதங்களை அமைக்க முயற்சிக்கின்றது, ரஷ்யா தடுத்தும் அவை கேட்கவில்லை

இன்னும் அமைக்கபடவில்லை என்றாலும் ரஷ்யாவிற்கு அது பெரும் கவலையே

தன் காலடியில் அமெரிக்கா வந்தால், அமெரிக்கா காலடியில் இருக்கும் வடகொரியா பலமிழக்க ரஷ்யா எப்படி விடும்?

விடாது, இதுதான் உலக அரசியல். நீ இங்கு வந்தால் நான் அங்கு வருவேன், என்ன செய்வாய்????

ஆத்திரத்தில் பல்லை கடித்துகொண்டு இருக்கின்றது அமெரிக்கா, ஆனால் விடமாட்டார்கள்

இனி என்னென்ன சம்பவங்கள் நடக்க போகின்றதோ தெரியவில்லை, ஆனால் விறுவிறுப்பு கட்டத்தை விஷயம் எட்டுகின்றது