தென் சீன கடல் விவகாரம்
தென் சீன கடல் விவகாரம் முறுகல் நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது
அக்கடல் தென்சீனகடல் என அழைக்கபட்டாலும் ஏசியான் நாடுகள் உட்பட பல நாடுகளுக்கான கடல்
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் வியட்நாம் கம்போடியா, புரூனே என ஏகபட்ட நாடுகள் அதில் உண்டு
ஆனால் அக்கடல்பரப்பு எல்லாம் எனக்கே என கிளம்புகின்றது சீனா?
கடலை வைத்து என்ன செய்வார்கள்? மீன்பிடிப்பார்களா இல்லை வரும் கப்பலுக்கு எல்லாம் டோல்கேட் வசூல் செய்வாகளா என்றால் விஷயம் வேறு
ஆம் அது பெட்ரோல் கிடைக்கும் பகுதி புரூனே போன்றவை அங்குதான் உண்டு
சீனாவில் பெரும் எண்ணெய்வளம் இல்லா நிலையில் இதை குறிவைத்து வருகின்றது சீனா
விடுமா அமெரிக்கா?
இது தன் கடற்பாதையினை பாதிக்கும் அதைவிட முக்கியமாக சீனா எண்ணெய் வளம் பெற்றுவிடும், அப்படி பெற்றுவிட்டால் எண்ணெய் ஒன்றால் வாழும் ரஷ்யா போல சீனாவும் பலம்பெற்றால் ஆபத்து என அஞ்சுகின்றது
இதனால் தென்சீன கடலில் அமெரிக்காவின் கடற்படை அடிக்கடி உல்லாச பயணம் மேற்கொள்ளும், அப்படியே சம்பந்தபட்ட நாடுகளின் கரையில் ஓய்வெடுக்கும்
சீனா பல்லை கடித்து கொண்டு மிரட்டும்
அப்படியாக இப்பொழுதும் அமெரிக்க போர்கப்பல் தென் சீனகடலில் பயணிக்கின்றது அதற்கு சீனா கடும் எச்சரிக்கையினை செய்துகொண்டிருக்கின்றது
ஆனால் இரண்டுமே அன்றாட வழக்கமாகிவிட்டது என்பதுதான் விஷயம்
