தெரிந்தபின் இருக்கின்றது அடுத்த ராக்கெட் சோதனை..
அமெரிக்க தேர்தலில் இறங்கிவிட்ட டிரம்ப், வடகொரிய அதிபர் பற்றி கேட்டால் அமைதிபடை சத்தியராஜ் போலவே பதிலளிக்க ஆரம்பித்துவிட்டார்
“யாரு, அட அந்த வெள்ளை குண்டனா? அவன் கெட்டிகாரனப்பா. நம்மகிட்ட தோஸ்த் ஆயிட்டார், பார்த்து ரொம்ப நாளாச்சி
அவன் நமக்கு எதிரா போகமாட்டானப்பா, நம்ம அவனை பிடிச்சி மூக்குல குத்து குத்துன்னு குத்தறுதுக்கு அவனே வழிவைக்கமாட்டானப்பா, அவன் பிரச்சினையே இல்லை” என சொல்லிவிட்டார்
தொடர்ந்து வடகொரியா செய்திருக்கும் சில ராக்கெட் இயந்திர சோதனை பற்றி கேட்டால் “அட அவன் அப்படி ஏதும் தமாஷ் பண்ணினால், அவன் இருப்பானா? அவன் நாடுதான் இருக்குமா? ராக்கெட்டுதான் இருக்குமா?” என சிரித்தபடியே சொல்லிவிட்டு சென்றுவிட்டார் டிரம்ப்
தன் முன்னோர்களின் புனிதமான பனிமலையில் ஏதோ செய்துகொண்டு குதிரையில் சுற்றி திரியும் வடகொரிய தலைவருக்கு இன்னும் விஷயம் தெரியவில்லை
தெரிந்தபின் இருக்கின்றது அடுத்த ராக்கெட் சோதனை..