தேங்காய் எண்ணெய் உடலுக்கு விஷம் என்ற சர்ச்சை
தேங்காய் எண்ணெய் உடலுக்கு விஷம் என்ற சர்ச்சையினை மறுபடியும் அமெரிக்க மருத்துவர் ஒருவர் கிளப்பிவிட்டிருக்கின்றார்
சித்த மருத்துவம் முதல் சமையல் வரை அக்காலம் முதல் தேங்காய் எண்ணையினை பயன்படுத்திய பகுதி தென்னகம், எல்லோரும் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள்
சிக்கல் கலப்பட எண்ணெய் உருவில் வந்தது, அதற்கு முந்தைய காலம் வரை சிக்கல் இல்லை
அமெரிக்க அம்மணியிடம் சிறந்த எண்ணெய் எது என்றால் ஆலிவ் என சிரிக்காமல் சொல்வார், இதெல்லாம் வியாபார தந்திரம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
ஆனால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தாத அமெரிக்காவில், ஆலிவும் இன்னபிற எண்ணெய்களும் பயன்படுத்தும் அவர்கள் நாட்டில் நான்கு பேரில் ஒருவர் புற்றுநோயாளிகள் என்கின்றது ஆய்வு