தேசத்துக்கு தலை குனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது
அந்த பிரியங்கா ரெட்டியின் கொடூர மரணம் மறுபடியும் உலக அரங்கில் தேசத்துக்கு தலை குனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது
நிச்சயம் இது திட்டமிட்ட கொடூர கொலை, இந்நாட்டின் மிக மேம்போக்கான சட்டதிட்டங்கள் இந்த பாதகத்துக்கு துணிய சொல்கின்றன , மிக மிக கடுமையான சட்டங்கள் மிக கடுமையான சட்டங்கள் இல்லாம்ல இது சாத்தியமில்லை
இந்த பஞ்சமா பாதகர்களுக்கு அந்த ராட்சத அரிப்பை தீர்த்துகொள்ள எத்தனையோ வழியிருப்பினும் மிக மிக துணிச்சலாக இப்பெண்ணை திட்டமிட்டு கொன்றது மிக மிக கடுமையான குற்றம்
இவர்கள் செய்திருக்கும் வகையினை கண்டால் இதுபோல ஏகபட்ட கொடூரங்களை அரங்கேற்றியிருக்கலாம் போல் தெரிகின்றது
பெண்களின் பாதுகாப்பினை அவர்களும் உறுதிசெய்யும் காலத்தில் இருக்கின்றது தேசம், மக்கள் தொகை மிகுந்த நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க இயலாது
அப்பெண் கருகி கிடக்கும் காட்சி மனம் பதைபதைக்க செய்கின்றது
பெண்ணை மென்மையாக படைத்ததே ஆண் என்பவன் அவளுக்கு முள்ளாக இருந்து காப்பான் என்பதற்காக, அந்த கடமையினை மறந்து இப்பாதகத்தை செய்தவர்கள் மனிதர்களாக இருக்கமுடியாது, மிருகங்களை விட இவர்கள் மகா மோசம்
மிருகங்கள் கூட கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடாது, அவ்வளவு கட்டுபாடாக நடந்துகொள்ளும், இவர்கள் அதனிலும் கீழானவர்கள் என்பதால் மாபெரும் தண்டனை கொடுத்தாலும் தகும்
கற்பழிப்பு என்பது ஒருவகை மனக்கோளாறு, இந்த கோஷ்டிகளுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்காவிடில் இம்மாதிரி கொடுமைகள் நிகழ்வதை தடுக்கமுடியாது
இனியும் தாமதிக்க ஒன்றுமில்லை பள்ளியிலே ஒரு பெண்ணை அவளின் அனுமதியின்றி தொடுவது தவறு என போதித்து வளர்க்காவிட்டால் எதிர்காலமும் சிக்கலே
பெண்ணை மதித்து, அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உருவாக்கும் ஆண்சமூகத்தை உருவாக்குதல் இத்தேசத்துக்கு மிக அவசியம்