தேசியகொடிக்கு நம் தேசத்தில் மரியாதை

“மயிலுக்கு போர்வை போர்த்தினான் பேகன், ஸ்ரீதேவிக்கு தேசிய கொடி போர்த்தியது அரசு”,

அந்த கோபத்தில் இந்த தேசியகொடிக்கு தேசத்தில் மரியாதை இன்றி போய்விடுமோ என்ற அச்சத்திலும் வருத்தத்திலும் அப்பதிவு எழுதபட்டது

அந்த பதிவிற்கு குவியும் ஆதரவினை காணும்பொழுது இவ்வளவு தேசபற்றாளர்கள், தேசியகொடியினை மனமார நேசிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கின்றது

ஏராளமானோர் பகிர்ந்திருக்கின்றார்கள், சிலர் மொழி மாற்றி கூட பதிந்ததாக சொன்னார்கள்

நாட்டுபற்று மிக்க சமூகம், தேசியகொடியினை மாபெரும் கவுரவமாக நினைப்பவர்களை முகநூலில் நண்பர்களாக பெற்றிருக்கின்றோம் என்பது பெரு மகிழ்ச்சி

உண்மையில் மனம் சிலிர்க்கின்றது, நாட்டுபற்று என்பது எல்லோர் மனதிலும் இருக்கின்றது. சோதனை வந்தவுடன் அது சிலிர்த்து எழுகின்றது என்பதற்கு இது சாட்சி.

இந்த பற்றும் நாட்டு அபிமானமும் இருக்கும்வரை இத்தேசம் எதற்கு அஞ்சவேண்டியதில்லை.

இந்த உத்வேகத்தில் நாட்டிற்காய் இன்னும் பல பதிவுகளை எழுத மனம் உந்துகின்றது

நன்றிகள் கோடி.

வந்தே மாதரம்..