தேசிய கட்சி செய்ய கூடிய விஷயம் அல்ல
மிக முக்கியமான தேச பிரச்சினையில் இந்நாட்டின் பெரும் தேசிய கட்சியான காங்கிரஸ் காட்டும் நிலைப்பாட்டினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்
காங்கிரஸின் நிலைப்பாடு ஒரு தேசிய கட்சி செய்ய கூடிய விஷயம் அல்ல
இம்மாதிரி குழப்பமான கொஞ்சமும் தேசாபிமானம் இல்லாத கட்சியாக இருப்பதை விட அது அழிந்து போவதே நாட்டுக்கு நலம் அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது
மற்றபடி திமுக போன்றவை எப்பொழுதெல்லாம் டெல்லியில் ஒற்றைபலம் கொண்ட ஆட்சி நடக்குமோ அப்பொழுதெல்லாம் குதிக்கும் பல கூத்துக்களை கட்டும்
அந்த கூத்தில் தமிழ்நாட்டுக்கு ஏதாவது நடக்குமா என்றால் நடக்காது
பின்னாளில் அதே கட்சியுடன் இவர்கள் ஓட்டியும் கொள்வார்கள்
இந்த காமெடி திமுகவின் நிலைப்பாடு தலையில அடித்துவிட்டு நகர்ந்துவிட கூடியது ஆனால் காங்கிரஸ் செய்துகொண்டிருக்கும் காரியம் விஷம்