தேர்தல் துளிகள் 18/03/2019 (1)

கடும் முயற்சி

சாதி அடையாள தலைவர் என்ற அபிமானத்தை மாற்ற கடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் தினகரன்

இதனால் தினகரனின் கிட்னியின் கிட்னிகள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றன, இது மறவர் கட்சி அல்ல நாடாருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கின்றோம், இது சாதிமதற்ற கட்சி என கிட்னிகளுக்கு ஏக மகிழ்ச்சி

“ஆக பணம் நிறைய வைத்திருந்தால் எந்த சாதியாலும் உங்களுக்கு சீட் கொடுக்க தயக்கமே இல்லை, அப்படித்தானே?” என கேட்டால் அவர்களிடம் பதிலே இல்லை

வாழ்வா? சாவா?

அமெரிக்க வெளியுறவு துறையோ, ரஷ்ய ராணுவமோ ஏன் இஸ்ரேலிய உளவுதுறையோ கூட இப்படி நுணுக்கமாக வேட்பாளரை நிறுத்தமுடியாது

அப்படி மிக கச்சிதமாக ஒவ்வொரு கட்சியும் மிக கவனமாக வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றது

போட்டி மிக கடுமையாக இருக்கும், வாழ்வா? சாவா? என கடும் நெருக்கடியில் இருக்கும் கட்சிகளின் நிலைபாட்டில் கவனமும் வேகமும் இருக்கின்றது

மிகமிக விறுவிறுப்பான தேர்தலாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

நமக்கென்ன? 1 மாதம் இனி நேரம் செல்வதே தெரியாது…

“அரசியல்வாதி” மனைவி

துர்கா ஸ்டாலின், காந்திமதி அழகிரி, காவேரி மாறன்…. என திமுக மேலிட பெண்கள் பெயர் வரிசை வரும்

ஆனால் அவர் மட்டும் கனிமொழி கருணாநிதியாம். இன்னொருவர் தமிழச்சி தங்கபாண்டியனாம்

இவர்களுக்கெல்லாம் கணவன் இல்லையா?

இதைத்தான் அவ்வையார் சொன்னார் “இல்லாதானை இல்லாளும் மதியாள்”,

ஆம் அரசியல் செல்வாக்கு இல்லாத கணவனை “அரசியல்வாதி” மனைவி மதிப்பதே இல்லை

“மதசார்பற்ற கூட்டணி”

திமுக கூட்டணியின் பெயர் “மதசார்பற்ற கூட்டணி” என அறிவித்தார் ஸ்டாலின்

நல்லது

அந்த மதசார்பற்ற கூட்டணியில் இருப்பது யார்? முஸ்லீம் லீக், கிறிஸ்தவ கூட்டமைப்பு இன்னபிற‌

ஏதாவது புரியுமா? புரியாது இதுதான் அரசியல்