தேர்தல் துளிகள் 19/03/2019 (1)
இதற்கே அலறினால் எப்படி?
கோவை சரளா நேர்காணல் செய்ததால் கட்சியிலிருந்து விலகினார் மய்யத்து உறுப்பினர்
இதற்கே அலறினால் எப்படி?
அடுத்து சகீலாவின் நேர்காணல் விரைவில் வரலாம், அதற்கு பயந்துதான் அன்னார் ஓடியிருப்பாரோ?
ஆக இன்னொரு வடிவேலாக கமலஹாசன் உருவாகிவிட்டார், அவரின் பரிதாபமான வீழ்ச்சி தொடங்கிற்று
அரசியலில் தோற்றபின் சிவாஜி கணேசன் எனும் மாபெரும் நடிகனுக்கே சினிமாவில் இடமில்லை என்றபின் கமலஹாசன் எம்மாத்திரம்?
சு.திருநாவுக்கரசர் திருச்சியில் போட்டியிடலாம் : செய்தி
இந்த திருநாவுக்கரசுதான் பொள்ளாச்சி கொடூரனான அந்த திருநாவுக்கரசு என சொல்லிவிட்டால் போதும், அதை நம்பவும் ஒரு கூட்டம் கண்டிப்பாய் உண்டு
அதன் பின் இந்த திருநாவுக்கரசர் கல்லணையில் குதிக்க வேண்டியதுதான்
காமெடிக்குத்தானே கட்சி
“மச்சான் அக்கா உன்ன கூட்டியார சொல்லிச்சி..” என ரத்த கண்ணீரில் ஒருவன் எம்.ஆர் ராதாவிடம் சொல்வான்
ராதா சீறுவார், “அதெல்லாம் இல்ல மச்சான் நீ வா..” என அவனும் மல்லுக்கு நிற்பான்
அங்கிள் சைமனின் ஆடியோவினை கேட்கும் பொழுது அதெல்லாம் நினைவுக்கு வருகின்றது
ஏதோ கபடி ஆடும் களத்தில் சண்டை போடுவது போல நீ வெளியே போ என அரசியல் தலைவனும், போகமாட்டேன் என தொண்டனும் பேசிகொள்வது காமெடிதான்
அவர்கள் காமெடிக்குத்தானே கட்சி நடத்துகின்றார்கள்? இது கூட இல்லையென்றால் எப்படி?
ராகுல் காந்திக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்
முஸ்லிம், கிறிஸ்தவர், மொழி சிறுபான்மையினருக்கு தமிழக காங்கிரஸ் 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: ராகுல் காந்திக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்
ஒரு படத்தில் பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என மறைமுகமாக சத்யராஜிடம் தோசை ஆசையினை சொல்வார் அல்லவா?
முதல்மரியாதையில் சிவாஜி ராதாவிடம் சொல்வார் அல்லவா “நான் எனக்காக சாப்பிடல, உனக்கு வவுறுவலிக்கும் பாரு அதுக்காகத்தேன் சாப்புடுறேன்..”
அதுதான் இது
எனக்கு சீட் தாருங்கள் என்பதை எப்படி மறைமுகமாக கேட்கின்றார் பார்த்தீர்களா? இதுதான் திறமை என்பது.
டாக்டர் &சன் கோரிக்கை
திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் அவசியம் : டாக்டர் &சன் கோரிக்கை
அப்படியே அரசியல் கட்சியினை ஒருவன் ஆதரிக்கவும் கட்சியில் இருக்கவும் பெற்றோர் அவசியம் என ஒரு சட்டம் கொண்டுவருவோமா என கேளுங்கள் ஓடிவிடுவார்கள்
மத உரிமை, திருமணம்போன்றவை எல்லாம்
ஒருவரின் சொந்த விஷயம், அதில் இப்படி எல்லாம் கட்டுப்பாடு கொண்டுவருவது சரியாக இராது