தேர்தல் துளி – 21 பெப்ரவரி 2019 (2)
பயப்படாம வாங்க
“அண்ணே புரொகிராம் சொல்லுங்க..
இப்போ இந்திய கம்யூனிஸ்ட்கிட்ட பேசபோறோம்
3 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட்
அப்புறம்
3.30க்கு வாசன் வருவார்
அப்புறம்
4 மணிக்கு மார்கிஸ்ட் கம்யுனிஸ்ட் தொகுதி புடுங்க வருது
அப்புறம்
5 மணிக்கு திருமா வருவார், அவரோட மல்லுகட்டனும்
அப்புறம்
6 மணிக்கு வைகோ வருவார், அவருக்கும் தொகுதி கொடுக்கணும்..
அப்புறம்
அதுக்கப்புறம் நம்ம கட்சிக்குள்ள சண்டை வரும், கனிமொழி குரூப் , தயாநிதி குருப்புண்ணு அடுத்த பங்கீடு
அண்ணே அதை நாளை வச்சுக்கலம்ணே முடியலண்ணே
அட இதுக்கே இப்படின்னா எப்படி? ராஜ்சபா எம்பி பங்கீடும் இப்பவே முடியணும்னு அடுத்த பஞ்சாயத்து இருக்கு
அண்ணே விட்ருங்கண்ணே…
இல்ல தம்பி, தொகுதிபங்கீடுண்ணா உட்கட்சிக்கும் சேர்த்துண்ணு எல்லோரும் முடிவா வந்திருக்காங்க, விடமுடியாது வாங்க
அண்ணே வேண்டாம்ணே
இல்ல தம்பி பயப்படாம வாங்க, பார்த்துக்கலாம்..
கருப்பு எம்ஜிஆர் கூட்டணி
“கொஞ்சநாளா உடம்பு சரியில்ல நாட்டு நடப்பு தெரியல, நீங்க பாஜக தரப்புல இருந்து வந்திருக்கீங்களா? இல்ல காங்கிரசா இல்ல வேற ஏதும் கமலஹாசன் கட்சியா?
கேப்டன் கிண்டல் எல்லாம் வேண்டாம், நான் இப்பொ காங்கிரஸ்
அப்படியா நானும் என் கட்சில சேர வந்துட்டீங்கண்ணு நினைச்சேன்
இல்ல, நலம் விசாரிக்க வந்தேன், ஏன் இப்படி ஆயிட்டீங்க?
பாவி பயலுக, கருப்பு எம்ஜிஆர்னு எப்போ சொன்னானுகளோ அப்ப தொடங்குன நோய் இன்னும் தீரல சார்
நான் “அடுத்த எம்ஜிஆர்”னு என்னை சொன்னேன், நீங்க “கருப்பு எம்ஜிஆர்”னு உங்களை சொன்னீங்க , இரண்டுபேரும் எப்படி ஆயிட்டோம் பார்த்தீர்களா?
ஆமாங்க, அந்த ஆளு பேரை சொல்லிட்டு வந்த ஒருத்தனும் உருப்படல, “சின்ன எம்.ஜி.ஆர்” கூட ஜெயில்ல இருக்காரு
அதெல்லாம் இருக்கட்டும், நீங்க பழசெல்லாம் மறந்துட்டுகூட்டணிக்கு வரணுமாம் ராகுல் சொன்னாரு
ராகுலுக்கும் எனக்கும் என்ன? உண்மைய சொல்லுங்க ஸ்டாலின் தான சொன்னாரு
ஆமாங்க, எல்லாத்தையும் மன்னிச்சிட்டு வந்துருங்க, 2 பேருக்கும் இல்ல எங்களோட சேர்த்து 3 பேருக்கும் நல்லது
என் மண்டபத்தை இடிச்சத கூட மன்னிச்சிருவேன் ஆனா அந்த வைகோவ கூட வச்சிருக்காருல்ல அத மன்னிக்கவே மாட்டேன், அவர அடிச்சி துரத்திட்டு வாங்க
அய்யோ அவரால ஸ்டாலின் படுறபாடு முடியலிங்க, உள்ளேயும் வைக்க முடியல, வெளியில அனுப்பனும்னு முடிவு பண்ணினா முன்னால திமுகவ கேவலமா திட்டுன வீடியோவ அவரே ரிலீஸ் பண்ணி சிரிக்கிறார், வெளிய விட்டா அவ்வளவுதான்
சரி, 10 சீட் தரசொல்லுங்க கூடவே சுதீஷ ராஜ்யசபா எம்பி ஆக்கணும், முடிஞ்சா கொடுங்க இல்ல பழனிச்சாமி 20 கொடுக்க தயாரா இருக்காரு
20 ….ஆ
ஆமாய்யா அவரு வள்ளல், தமிழ்நாட்டில் சீட் இல்லண்ணா இந்தியாவுல வேற எங்க வேணும்னாலும் வாங்கிதருவாராம்
இல்லீங்க எங்களுக்கே 10 தான்
அதான் 10 இருக்குல்ல அதுல 5 நீங்க குடுங்க திமுக 5 கொடுக்கட்டும் , கணக்கு சரியா வரும்
அது…
இனி இந்தபக்கம் வருவீங்க…”
சாகசமாக காங்கிரஸ் கூட்டணி ?
மிக சாகசமாக காங்கிரஸ் கூட்டணியினை உறுதி செய்தார் கனிமொழி , உடன்பிறப்புக்கள் சிலாகிப்பு
இதில் என்ன சாகசம்?
காங்கிரசால் அதிமுக பக்கம் செல்லமுடியாது அங்கே கையில் கம்போடு காவல் இருக்கின்றது பாஜக
மூன்றாம் அணி என்னாகும் என்பது காங்கிரசுக்கு தெரியாததல்ல
கடந்த தேர்தலில் திமுகவும் காங்கிரசும் தனித்து நின்று ஒரு இடமும் கிடைக்காமல் முதுகில் வாங்கிய அடி இருவருக்கும் மறக்குமா?
காங்கிரஸ் இல்லா காலங்களில் திமுக வாங்கியிருக்கும் அடி கொஞ்சமல்ல, அது போக மம்தா பேனர்ஜி பெயரை சொல்லி எல்லாம் திமுக இங்கு வாக்கு வாங்க முடியாது
இருவருக்கும் வேறு தெரிவு இல்லை, வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கும் ஸ்டாலினுக்கு சுத்தமாக வேறு வழி இல்லை
ஆக வேறுவழியே இருவருக்கும் இல்லை
இதில் என்ன சாகசத்தை கனிமொழி செய்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி?
எப்படி சமாளிக்க போறோம்?
“அவர் போக்குல ஸ்டாலின் 10 தொகுதி தமிழ்நாட்டில கொடுத்திட்டார்
இந்த 10 சீட்டுக்கு 10 ஆயிரம் பஞ்சாயத்து வரும், அவரா பார்பார், நாமதான் பார்க்கணும். எப்படி எல்லாம் கோஷ்டி கோஷ்டியா வருவாங்க தெரியுமா?
கண்டிப்பா ஜெயிக்க மாட்டானுக, ஜெயிக்கிற தொகுதிய கேட்டு வாங்கவும் மாட்டானுக
ஆனா இவனுகளோட செய்யுற பஞ்சாயத்து இருக்கே அய்யோ…..
வர்ற கடிதம், பேக்ஸ் எல்லாம் அவனுக மொட்டை கடிதமாவே இருக்கும், டெல்லிக்கு வர்ற பிளைட்ல எல்லாம் அவனுகதான் வருவானுக
தேர்தல் முடியுரவரை தமிழ்நாட்டு காங்கிரஸ்காரனுக தூங்கவிட மாட்டானுகளே. எப்படி சமாளிக்க போறோம் மைசன்?
தேர்தல் வரைக்குமா? அதுக்கு பின்னாடி ஏன் தோற்றோம் தெரியுமான்னும் ரவுண்டுகட்டி வருவாங்க மம்மி, அதுதான் பயமா இருக்கு..”
5 தொகுதி
“அக்கோவ் 5 தொகுதில உங்களுக்கு சீட் இல்லியாம் , செய்தி வருது
என்ன நிறுத்தினாலும் நாம ஜெயிக்கவா போறோம்? சீட் கிடைக்காத வரைக்கும்தான் மதிப்பும் கெத்தும் தம்பி, கிடைச்சி தோத்துட்டா எல்லாம் போச்சி , அந்த லட்டு டப்பா எடு, கொண்டாடுவோம்”