தேர்தல் துளி – 25 பெப்ரவரி 2019 (1)
“உங்கள அவமானமா திட்டின சிவசேனை கூட நீங்க கூட்டு வச்சிருக்கிங்க, எங்கள அவமானமா திட்டின பாமக கூட நாங்க கூட்டணி வச்சிருக்கோம், இது தப்பாம், எப்படி இருக்கு?
ஆமா பானர்ஜி
பானர்ஜி இல்ல சார் பன்னீர்ஜி
ஆமா பன்னீர் ஜி, வைகோ அவங்க கூட இருக்கலாம் பாமாக நம்ம கூட இருக்க கூடாதா?
அதானே ஜி, இப்படி ஒரு சிக்கல் வரும்னுதான முன்னாலே வைகோவினை அங்கே அனுப்பிட்டோம்
அது தெரியாம அந்த ஆளு நம்மள திட்ராரு, அன்புமணி சூட்கேஸ் மணியாம், வைகோ என்ன கண்டெய்னர் சாவியா?”
தேர்தல் ஞானம்
“கூறாமல் சந்நியாயம் போ” எனும் அவ்வையின் மொழி மோடிக்கு புரிந்துவிட்டது போல
“எல்லாம் நிறைவேறிற்று” என்பது இயேசுவின் கடைசி மொழி
மகாத்மா காந்தி விவசாயிகளின் நிலையினை கண்டு மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக சுற்றினாராம்
நீவிர் அப்படி செய்ய தயாரா? மிஸ்டர் மோடி..
ஆனாலும் வரலாற்றில் ஒரு சம்பவம் உறுத்துகின்றது
இயேசு சிலுவையில் அடித்து கொல்லபடும் முன்னால் இப்படித்தான் உடனிருப்போர் கால்களை கழுவினாராம்
இயேசுவுக்கே அந்த பாடென்றால் மோடிக்கு என்ன பாடோ?
தேர்தலில் தன்னை அடித்து கொன்று எறியபோகின்றார்கள் என்ற ஞானம் மோடிக்கு வந்திருக்கலாமோ?
கேப்டன் அடம் ?
என்னண்ணே இந்த கேப்டன் இப்படி அடம்பிடிக்காரு, வரமாட்டார் போலயே..
தம்பி ஒருகாலத்துல தலைவரும் ஜெயாவும் எப்படி ரகசிய ஒப்பந்தம் போட்டு மூப்பனாரையே காணாம ஆக்கினாங்க, அட இந்த கேப்டனையே ஓட வைக்கலியா. அப்படி பழனிச்சாமிக்கு ஆள் அனுப்பியாச்சி, கேப்டன் அவ்வளவுதான், மூப்பனாரையே கதற வச்சவங்க தம்பி நாம
அவர் தனியா நிக்கமாட்டாராண்ணே?
ஆமா தம்பி, அந்த பக்கம் போனால் சட்டமன்ற தேர்தலுக்கு நம்ம பக்கம் வரணும், இப்போ நம்ம பக்கம் வந்தா அப்புறமா அந்த பக்கம் போகணும், வேற வழி இல்ல தம்பி
அப்படியாண்ணே? அந்த பிரேமலதா என்னல்லாமோ பேசுதுண்ணே
அட அதுக்கெல்லமா? கழுத்தோரம் மஞ்சள் துணி சுற்றியவர் எல்லாம் கலைஞராக முடியாதுண்ணு அடிச்சி விடுங்க, இத கூடவா சொல்லி தரணும்?”
தென் மாவட்ட தொகுதியா?
தென் மாவட்ட தொகுதி ஒன்றில் தமிழிசைக்கு வாய்ப்பு வழங்கபடலாம் : செய்தி
தேரையே இழுத்து தெருவில் விடும்பொழுது , மேளக்காரரும் தெருவுக்கு வந்துதான் தீர வேண்டும்
ம்ம் தமிழிசை அக்கா ஸ்டார்ட் மியூசிக்…
ரஜினி கமல் அரசியல்
“ரஜினி, நீங்க விஜயகாந்த பார்த்துட்டு என்ன பார்க்காமல் போனது சரியில்லங்க..
இங்க பாருங்க கமல், அரசியல்னா பணத்த அள்ளிவிடனும். நான் கூட அதுக்குத்தான் யோசிக்கிறேன். ஆனா விஜயகாந்த் பாவம் சொந்த காசு நிறைய இழந்துட்டார், எவ்வளவு இழந்துட்டார்னு கேட்கத்தான் போனேன் நிறைய இழந்துருப்பார் போல
அப்போ என் அரசியல்?
கமல் நீங்க அரசியல்ல உருப்படமாட்டீங்க, உங்கள நல்லா தெரியும் அடுத்தவன் காசுல சினிமா எடுத்து உங்க ஆசை எல்லாம் தீர்க்குற ஆளு நீங்க. எத்தனையோ புரடியூசர் உங்களால தெருவுக்கு வந்திருக்காங்க
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அரசியல் அப்படி இல்ல, காசு கொட்டனும். நீங்கதான் கொட்டனும் இங்க புரடியூசர் எல்லாம் சிக்க மாட்டாங்க, எனக்கு நல்லா தெரியும் ஒரு நாளும் நீங்க பத்து பைசா சொந்தமா செலவு பண்ணமாட்டீங்க, சோ அரசியல் உங்கள்க்கு வராது, விட்டுருங்க..”