தேர்தல் முடியும் நேரம் பொன்பரப்பி கலவரம்

தேர்தல் முடியும் நேரம் பொன்பரப்பி கலவரம் என்பதால் பெரும் சிக்கலில் இருந்து தமிழகம் தப்பித்தது

இல்லையென்றால் இந்நேரம் மாபெரும் அசம்பாவிதங்கள் ஆங்காங்கே தலைதூக்கியிருக்கும்

இம்மாதிரி நேரங்களில் ஒன்றை செய்யலாம்

காவல்துறை களத்தில் இறங்கி சம்பந்தபட்ட இரு தரப்பையும் முடக்கி விசாரிக்க வேண்டும்

ஆழ விசாரித்தால் இதில் எல்லாம் யாரோ இருவரின் தனிபட்ட பகை தவிர ஏதும் இருக்காது, பழிவாங்க சாதியினை இழுத்திருப்பார்கள்

எல்லா சாதிகலவரமும் இப்படித்தான் தொடங்கி அரசியலில் முடியும்

அதைவிட முக்கியம் இதை கலவர நோக்கில் பரப்புவதை தடுக்க வாட்சப் முதல் முகநூல் வரை கடும் கட்டுபாடுகளை விதித்து காட்சி பரவுவதை தடுக்க வேண்டும்

இல்லாவிடில் பொன்பரப்பி அமைதியாகும் நேரம் வேறு எங்கோ எரிந்து கொண்டிருக்கும்

பதற்றமான நேரம் சமூக ஊடகங்களை முடக்கு என்பது இப்பொழுது உலகெல்லாம் இருக்கும் ராஜநீதி

தமிழக காவல்துறை அதை உடனே செய்தால் நல்லது