தொண்டர்களுக்கு மகா கெட்ட நேரம்
உலகில் எவ்வளவோ இயக்கத்தவரை கண்டாலும் புலிகள் இயக்கம் மேல் ஒரு இரக்கமும் அபிமானமும் எல்லோருக்கும் உண்டு
அதன் தலமைதான் சரியில்லையே தவிர அந்த இயக்கத்தவரின் அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் எந்நாளும் மறக்கமுடியாதவை. அவ்வளவுக்கு கட்டுகோப்பாக இருந்தார்கள், இயக்கத்துக்காய் எதையும் தாங்கினார்கள்
அமைதிபடை அதிகாரிகள் முதல் இந்திய மேலிடம் வரை அந்த போராளிகள் மேல் ஒரு பரிதாபம் எந்நாளும் இருந்தது. இவ்வளவு நல்ல போராளிகள் ஒரு மோசமான முட்டாள் தலைவனிடம் சிக்கிவிட்டார்களே என்ற பரிதாபம் எல்லோருக்கும் இருந்தது
உண்மையில் அந்த போராளிகளே புலிதலமையினை காத்து நின்றார்கள், அவனுக்காக அழிந்தும் போனார்கள்
ஈழத்தை காக்க கிளம்பி கடைசியில் பிரபாகரனுக்காக திசைமாறி அழிந்தும் போயினர் அம்மாவீரர்கள்
அந்த புலிகளை நினைத்தால் வரும் பரிதாபம் இப்பொழுதெல்லாம் திமுகவினர் மேலும் வருகின்றது
இப்படிபட்ட தொண்டர்கள் கிடைத்திருப்பது முக ஸ்டாலினின் நல்ல நேரம், ஆனால் அவர் தலைவராய் இருப்பது தொண்டர்களுக்கு மகா கெட்ட நேரம்