தொழில்நுட்ப புரட்சியில் எல்லைகள் தகர்ந்து கொண்டிருக்கின்றன
உலகம் வேகமாக மாறிகொண்டிருக்கின்றது, தொழில்நுட்ப புரட்சியில் எல்லைகள் தகர்ந்து கொண்டிருக்கின்றன,
அமேசான் நிறுவணம் தமிழக இலக்கிய சந்தையில் ஊடுருவும் அளவுக்கு நிலமை வந்தாயிற்று
இதன் அடுத்தகட்டம் எதுவாகவும் இருக்கலாம், ஆம் 5ஜி தொழில்நுட்பம் இன்னும் 10 ஆண்டுகளில் உலகைபுரட்டி போடும்
டிரைவர் இல்லா கார் முதல் சகலமும் சாத்தியம், ஏன் பள்ளி கல்லூரிக்கே செல்லாமல் வகுப்புகளும் சாத்தியம்
இது மருத்துவத்தில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும் என்கின்றார்கள், அதாவது மருத்துவ சிகிச்சையில் இருபிரிவு உண்டு ஒன்று கட்டாயம் மருத்துவர் கைவைத்து தீரவேண்டிய விஷயம் இன்னொன்று ஆலோசனை
இனி எல்லா நாட்டு டாக்டர்களும் வருங்காலத்தில் எல்லா நாட்டு மக்களுக்கும் தரிசனம் தருவார்கள், மொழி சிக்கல் இல்லை அதற்கான மொழிமாற்று சாப்ட்வேர்கள் உருவாகிவிடும், நீங்கள் தமிழில் கேட்டாலும் அவர்களுக்கு அவர்கள் மொழியில் கேட்கும் அவர்கள் எம்மொழியில் பேசினாலும் உங்களுக்கு புரியும்
இனி வருங்கால மருத்துவமனைகள் வீட்டு திரைகளிலே நடக்கும், ஆன்லைலில் பணம் கட்டிவிட்டு டாக்டரை தரிசிக்கலாம், அவர் உங்கள் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு எல்லாம் சோதிக்க சொல்வார் அதற்கான வசதிகள் எளிதாக வீட்டுக்கே வரும், டாக்டர் மருந்து மாத்திரை சொல்வார் அதை ஆன்லைனில் மெடிக்கலுக்கு சொன்னால் மருந்தும் வீட்டு வாசலில் ரெடி
இது இன்னமும் ஆழமாக செல்லலாம் , மருத்துவர் என வரும்பொழுது மேல்நாட்டு மருத்துவரையே மக்கள் நாடுவார்கள், அவர்கள் பக்கமே சரிவார்கள் இது பொதுவிதி
தொழில்நுட்ப சதியால் இனி வியாபாரம் முதல் மருத்துவம் வரை வெளிநாட்டுக்காரன் கைக்கு செல்வதை தவிர்க்க முடியாது
அவனின் அடிப்பொடி மருத்துவர்கள் சிலர் போதும் டாக்டர் வரவேண்டிய இடத்துக்கு வருவார்கள், அதை கூட நிரப்ப ரோபோக்கள் தயாராகிவிடும்..
வேலையில்லா டாக்டர் கூட்டம் பெருகும்..
இதை உணர்ந்த ஆசிய நாடுகள் இனி தரமான மருத்துவர்கள் உருவாவது ஒன்றே சிக்கலுக்கு தீர்வு என கருதுகின்றன, நீட் இந்தியாவில் வந்தது போல உலகெல்லாம் மருத்துவத்துக்கான கெடுபிடிகள் அதிகரிகின்றன
ஆனால் இங்கு இது பார்பன சதி, ஆரிய சதி என ஒரே சத்தம். எல்லாம் அரசியல்
இதெல்லாம் உன் கற்பனை என சொல்வீர்களாயின் வருங்காலத்தில் நீங்களே இதை பார்க்கத்தான் போகின்றீர்கள், தொழில்நுட்பத்தை கொண்டு வியாபாரத்தை வளர்ப்பதில் கெட்டிக்காரன் வெள்ளையன்
எல்லா வியாபாரமும் அவனுக்கு செல்வது போல இனி மருத்துவமும் செல்லும்
இங்கு இனி மருத்துவத்துக்கு பழைய எதிர்காலமில்லை, மீடியாக்கள், வியாபாரம் உட்பட எல்லாமே மக்கள் கைக்கு சாமான்யமாய் கிடைப்பது போல மருத்துவமும் கிடைக்கும்
மிக மிக தேர்ந்த மருத்துவர்களுக்கு மட்டுமே இனி எதிர்காலம் மற்றபடி சொல்ல ஒன்றுமில்லை