தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்
தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆகசிறந்த பயன் என்னவென்றால் அரசியல்வாதிகளின் பழைய பேச்சையும் அறிக்கையினையும் அப்படியே வைத்திருந்து இப்பொழுது கொடுப்பது
ஒவ்வொரு பயலும் எப்படி எல்லாம் பல்டி அடித்துகொண்டிருக்கின்றான் என்பதை கண்முன் காட்டும் தொழில்நுட்பமே நீ வாழ்க..
இந்திய / தமிழக அரசியல்வாதிகளின் மாபெரும் எதிரி இன்று தொழில்நுட்பம் ஒன்றே
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என இளங்கோ அக்காலத்திலே சும்மா சொல்லவில்லை
அறக்கடவுளின் விஞ்ஞான வடிவம் இன்றைய தொழில்நுட்பம் என்பது ஆகசரியானது , ஒவ்வொரு போலி அரசியல்வாதியின் முகத்தையும் அதுதான் கிழித்து கொண்டிருக்கின்றது