தொழுகை கூடத்தில் தாக்குதல்
ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்தவர்களை தாக்கினாலும் அதை ஒட்டி வரும் யூதரின் பாஸ்கா திருவிழா எனும் பாஸ் ஓவர் பண்டிகையினையும் கவனிக்க தீவிரவாதிகள் மறப்பதில்லை
பாஸ் ஓவர் அல்லது பாஸ்கா என்பது யூதரின் முக்கியமான கொண்டாட்டம், பாஸ் என்றால் கடந்து செல்லுதல் அதாவது எகிப்தில் அடிமையாய் இருந்த அந்த கூட்டம் அந்த நாளில்தான் மீண்டு வந்தார்களாம்
அந்நாளில் அவர்கள் கடும் உற்சாகமாய் இருப்பார்கள் அப்படி ஒரு நாளில்தான் இயேசுவும் கொல்லபட்டார்
கிட்டதட்ட 10 நாளில் கொண்டாடுவார்கள்,
இப்பொழுதெல்லாம் ஒரு பக்கம் அந்த ரொட்டியும் இன்னொரு பக்கம் ஆட்டுகறியுமாக இருந்தாலும் வானத்தை பார்த்து கடவுளை நினைத்தாலும் தீவிரவாதிகளையும் சுற்றி பார்த்துகொள்வார்கள்
முன்பெல்லாம் இஸ்ரேலில் அந்த கொண்டாட்டத்தில் தாக்குதல் நடக்கும், இப்பொழுது கடும் பாதுகாப்பு என்பதால் அங்கு தாக்க வாய்ப்பு குறைவு
உலகெல்லாம் அவர்கள் இருந்தாலும் இஸ்ரேலை அடுத்து அமெரிக்காவில் யூத தொழுகை கூடம் அதிகம்
யூதருக்கு கோவில் கிடையாது, கட்டினாலும் ஜெருசமேலில்தான் கட்டுவார்கள் மற்ற இடமெல்லாம் ஜெபம் நடக்கும் தொழுகை கூடம் மட்டுமே
கொச்சியில் கூட அது உண்டு
அப்படி அமெரிக்காவில் கலிபோர்னியாவின் தொழுகை கூடத்தில் தாக்குதல் நடந்திருக்கின்றது
3 பேர் பலி என்கின்றன செய்திகள், 6 மாதத்துக்கு முன்புதான் அங்கு 11 பேர் கொல்லபட்டார்கள்
விஷயம் தெரிந்த இஸ்ரேல் சீறுகின்றது, டிரம்ப் பல்லை கடிக்கின்றார்
உலகில் மசூதி , தேவாலயம் வரிசையில் தொழுகை கூடமும் சேர்ந்தாயிற்று