தோணியினை காலம் தாழ்த்தி களமிறக்கியதின் விலை
பல உள் அரசியல் காரணங்களுக்காக தோணியினை காலம் தாழ்த்தி களமிறக்கியதின் விலை உலககோப்பை பறி போனது.
ஆம் தோணி 2டவுணாக இறங்க வேண்டியவர், தினேஷ் கார்த்திக், ரிஷ்பபந்த் என யாரெல்லாமோ இறங்கிய பின் கடைசி நேரத்தில் அவரை களமிறக்குவது யாருக்கும் சரியாக படவில்லை டோனி உட்பட
தேசமே இப்பொழுது சோகத்தில் இருக்க, ஒரே ஒரு நபர் மட்டும் புன்னகை புரிந்துகொண்டிருப்பார்
அவர் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்
அவரும் கிரிக்கெட் ஆட்டக்காரர், 1980ம் ஆண்டுகால ஆட்டக்காரர், நன்றாகத்தான் ஆடியிருக்கின்றார், கபில்தேவ் காலத்து நபர். அவருக்கும் கபிலுக்கும் சரிவரவில்லை
இருவருமே ஹரியானாக்காரர்கள் என்றாலும் பொருந்தவில்லை. கபிலின் எழுச்சி யோக்ராஜ் சிங்கிற்கு வீழ்ச்சியினை கொடுத்தது.
பின்பு உலககோப்பையினை கபில் பெற்று கொடுத்ததில் யோக்ராஜ் காணாமலே போனார்
ஆனால் மனதில் வைராக்கியம் இருந்தது, அந்த வெறியில் யுவராஜ்சிங்கினை மாபெரும் ஆட்டக்காரராக வளர்த்தார்,
சும்மா சொல்ல கூடாது யுவராஜ் சிங்கினை அற்புதமான ஆட்டக்காரராக வளர்த்தார், 2011 உலக கோப்பை அவராலே வந்தது
யுவராஜ் சிங் வடிவில் தானே ஆடுவதாக மகிழ்ந்துகொண்டிருந்தார்..
பின்பு அணிஅரசியலால் டோனி இடம் மாற்றி யுவராஜ்சிங்கினை களமிறக்கி அவரை பழிவாங்குகின்றார் என அடிக்கடி புலம்பினார்
அதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை
டோனி இப்பொழுது ஒருமாதிரி இறக்கபடுவது போலவே யுவராஜும் இறக்கபட்டு நிலை தடுமாறவைக்கபட்டு பழிவாங்கபட்டார்.
என் வாழ்க்கையினை கபில் தேவும், என் மகன் வாழ்க்கையினை டோனியும் நாசமாக்கினர் என மனிதர் அடிக்கடி அழுதுகொண்டிருந்தார்.
இப்பொழுதுதான் அவர் மனம் அமைதியாயிருக்கும், கடவுள் இருக்கின்றான் என மனம் ஆறுதல்பட்டிருக்கும்.
டோனியின் மனம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை
அது அவருக்கு மட்டுமே புரியும் ,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதான்
டோனிக்கு விளைந்துவிட்டது
கோலிக்கும் அப்படி விளைச்சலை கொடுக்க எங்காவது ஒருவன் மட்டையும் பந்துமாக சுற்றிகொண்டிருப்பான் என்பது மட்டும் உண்மை..

