தோத்தாலும் ஜெயிச்சாலும்
அந்த குமரி அனந்தனின் பேச்சுக்கு 1960களில் அப்படி ஒரு மவுசு இருந்தது
இலக்கியமும் தமிழும் அவரின் நாவில் அப்படி கொட்டியது, சந்தேகமில்லை அண்ணாவுக்கு சரி நிகராக அவரை காங்கிரஸ் நிறுத்தியது
காமராஜரின் வலகரமாகவே அவர் இருந்தார்
மாற்று கட்சியாயினும் கலைஞரும் ராமசந்திரனும் அவரை கொண்டாடினர், கலைஞருக்கு அவர் மேல் தனி மரியாதை இருந்தது
காமராஜருக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிய அனந்தன் ஒரு கட்டத்தில் ஒதுங்கியே விட்டார்
இப்பொழுது ஏன் அந்த கதை, விஷயம் இருக்கின்றது அதற்குள் நாம் கவுரவம் படத்தின் ஒரு காட்சியினை பார்க்க வேண்டும்.
படத்தில் சிங்கம் பெரியப்பா சிவாஜியிடம் மகன் சிவாஜி ஆசிவாங்க வருவார்
இருவரும் அடுத்தநாள் கோர்ட்டில் மோத இருப்பார்கள், இந்நிலையில் தான் வெல்ல ஆசீர்வதிக்கும்படி வந்து நிற்பார் சின்ன சிவாஜி
உணர்ச்சி பூர்வமான அந்த காட்சியில் உச்சத்தில் பெரிய சிவாஜி இப்படி சொல்வார்..
“டேய் டாமிட், நீ தோத்தாலும் ஜெயிச்சாலும் இரண்டுமே எனக்கு அவமானம்டா…”
தூத்துகுடி தேர்தலில் தமிழிசையினை பார்த்து இதே வசனத்தை மனமார சொல்லிகொண்டிருக்கின்றார் குமரி அனந்தன்
அம்மணி தோற்றாலும் வென்றாலும் அது அவருக்கு அவமானமே
“சொல்லி கொடுத்ததோ துரோணரின் கவுரவம்
அவர்மேல் தொடுத்ததே அர்சுனன் கவுரவம்..”