தோமா எனும் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் எனும் ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை
தோமா எனும் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் எனும் ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை, நாம் முன்பே சொன்னபடி பைபிளில் இயேசுவுக்கு பின் சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வந்து அவர்கள் யூதரல்லா மக்களுக்கு இயேசுவினை போதிக்க தொடங்கும் பொழுது அந்த ஆவி அவர்களை மேற்கு நோக்கித்தான் ஏவிற்று
இதை அப்போஸ்தலர் நடபடிகள் எனும் புத்தகம் தெளிவாக சொல்கின்றது, ஆக ஒரு அப்போஸ்தலனும் முதலாம் நூற்றாண்டில் இந்தியா பக்கமே வரவில்லை
கிறிஸ்துவின் சீடர்களில் தோமா வித்தியாசமான பேர்வழியாக இருந்திருக்கின்றான், எதையுமே வித்தியாசமாக நோக்கும் சிந்தனை அவனுடையது, இயேசு உயிர்த்ததை நம்பாத அளவு பகுத்தறிவாளனாக இருந்திருக்கின்றான், பின் இயேசுவந்து அவனை நம்ப வைத்திருக்கின்றார்
தோமா எழுதிய நற்செய்தி ஒன்று உண்டு, அது வில்லங்கமானது என்பதால் மறைத்துவிட்டார்கள்
அந்த தோமா ஒரு சீட கூட்டத்தை வைத்திருந்தான், அது தோமா வழி கிறிஸ்தவமானது. கேரளாவுக்கும் அரேபியாவுக்கும் எக்காலமும் தொடர்பு என்பதால் அன்றே தோமாவழி கிறிஸ்தவம் கேரளாவுக்கு வந்தது
இயேசுவுக்கு பின் கிட்டதட்ட 300 ஆண்டுகளுக்கு பின் இவை கேரளாவுக்கு வந்தன
சிரிய கிறிஸ்தவம், தோமாவழி கிறிஸ்தவம் எல்லாம் கேரளாவுக்கு வந்தன, யூதர் கேரளாவில் வசித்தது போல அவர்களும் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் சத்தமின்றி இருந்தார்கள்
ஆம் யூதர் கிபி 70ம் ஆண்டில் ஜெருசலேம் ஆலயம் இடிக்கபட்ட கலவரத்தில் கொச்சிக்கு வந்தார்கள், இன்றும் அவர்கள் பரம்பரையும் அடையாளமும் கொச்சியில் உண்டு
அரேபிய கேரள தொடர்புகள் அப்படியாவனை பின்பு இஸ்லாமும் அப்படியே 7ம் நூற்றாண்டில் வந்தது
வாஸ்கோடகாமா எனும் போர்த்துகீசியன் 15ம் நூற்றாண்டில் கேரளாவின் கள்ளிகோட்டையில் கால்வைத்ததில் இருந்து இங்கு கிறிஸ்தவ காலணியாக்கமும் மதமாற்றமும் தொடங்கியது,
பிரான்ஸிஸ் சேவியர் அப்பொழுதுதான் இந்தியா வந்தார்
வாஸ்கோடகாமா கடும் எதிர்ப்பினை சம்பாதித்து கள்ளிகோட்டையில் கொல்லவும் பட்டான்
வாஸ்கோடகாமா கொல்லபட்டபின்பு போர்த்துகீசியர் கோவா பக்கம் சென்றனர் அங்கிருந்து மங்களூர்வரை தங்கள் சாம்ராஜ்யத்தை நீட்டிக்க போராடி நம்ம ஊர் வேலுநாச்சியர் போல அங்கு அப்பாக்கா என்பவள் 15ம் நூற்றாண்டிலே அவர்களை ஓட அடித்திருக்கின்றாள்


இதன் பின் சில இடங்களில் மட்டும் துறைமுகம் பக்கம் சமத்தாக வியாபாரம் பார்த்திருக்கின்றது போர்த்துகீசிய கோஷ்டி, அன்று பிரான்ஸ், பிரிட்டன், டச்சு கம்பெனி எல்லாம் இந்தியாவுக்கு வரவில்லை
கோவாவுக்கு அடுத்தபடியாக சென்னை அவர்களின் முக்கிய கேந்திரமாக இருந்தது, அன்று அது சென்னை அல்ல மாறாக போர்த்துகீசியரான மெட்ரூஸ் என்பவன் சமாதி இருந்த இடத்தை மெட்ராஸ் என அழைத்தனர்
அப்பொழுது கிறிஸ்தவம் போர்த்துகீசிய பகுதியான மெட்ராஸுக்கு கோவா போலவே ஊடுருவிற்று, அதில் தோமா வழி கிறிஸ்தவர்களும் உள்ளே வந்தார்கள்
கோவாவில் போர்த்துகீசியர் கிறிஸ்தவமதம் பரப்ப செய்த வெறியாட்டம் மகா கொடுமையானது, எனினும் அவர்களுக்கு முழு வெற்றியில்லை
அப்படி சென்னையிலும் சில முயற்சிகள் நடந்தன, அப்பொழுது பரங்கிமலையில் ஒரு தோமாவழி கிறிஸ்தவ துறவி கொல்லபட்டு அவன் உடல் சென்னை கடற்கரையில் அடக்கம் செய்யபட்டிருக்கலம்
அதை தூய ஆலயம் என அடையாளமிட்டு, போர்த்துகீசிய மொழியில் சாந்தோ ஆக்கியிருக்கலாம் என்பார்கள்
செயின்ட் எனும் ஆங்கில சொல் போர்த்துகீசிய மொழியில் சாந்தோ என மாறும், செயின்ட் நிக்கோலஸ் சாந்தா கிளாஸ் ஆனது, செயின்ட் குரூஸ் சாந்தா குருஸ் ஆனது போல செயின்ட் ஆலயம் சாந்தா ஆலயம் ஆனது
பின்பு சாந்தோம் ஆனது
இவை எல்லாம் 15ம் நூற்றாண்டு சம்பவங்கள், இதனால் சென்னை பரங்கிமலை ஆலயம் சென்னை சாந்தோமின் பழமை 500 ஆண்டுகளை தாண்டாது
இப்படி மெட்ராஸ் பக்கம் நடமாடிய போர்த்துகீசியர் கொழும்பு மலாக்கா என ரவுண் அடித்தனர், அப்படி ஒரு நேரம் பயணிக்கும்பொழுதுதான் வேளாங்கண்ணி பக்கம் ஒதுங்கி அங்கு ஆலயம் அமைத்தனர்
இப்படியாக அவர்கள் தென் கடற்கரை எல்லாம் ஆடிபாடி திரிந்து ஆலயம் கட்டுவதும் மகிழ்வதுமாக இருந்தனர், இன்றும் தென்னக கடற்கரை கிறிஸ்தவ பெயர்கள் போர்த்துகீசிய பெயர்களாகவே இருக்கும்
நெல்லை மாவட்ட வடக்கன்குளம் ஆலயம் கூட போர்த்துகீஸ் காலத்தில் தொடங்கபட்டதே
பின்பு 16ம் நூற்றாண்டில் பிரிட்டானியர் வந்து போர்த்துகீசியரை மெட்ராஸில் இருந்து அடித்துவிரட்டி ஜார்ஜ் கோட்டையினை கட்டி வலுவாக காலூன்றினர், அதன் பின் தமிழகத்தில் இருந்து விடைபெற்ற போர்த்துகீசிய கோஷ்டி கோவாவிலே அடைக்கலமானது
அங்கு அவர்கள் மேலும் ராஜ்யத்தை விரிக்க எண்ணினர், மாவீரர் சிவாஜி அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தான் பின்னாளில் அவன் வீழ்ச்சிக்கு பின் பிரிட்டானியர் போர்த்துகீசியரை முழங்காலில் நிறுத்தினர்
சுதந்திர இந்தியாவில் பட்டேல் கோவாவினை இந்தியாவோடு இணைத்தார்
இதுதான் போர்த்துகீசியர் இந்தியாவில் ஆண்ட வரலாறு
அவர்கள் சென்னையினையும் கொஞ்சகாலம் ஆண்டனர், அப்பொழுதுதான் பரங்கிமலை, சின்னமலை , சாந்தோம் எல்லாம் உருவாயின
கோவா போல மதராஸையும் முழு கிறிஸ்தவ பூமியாக்க அவர்கள் விரும்பினர், அதற்கு சில வலுவான ஆதாரங்களை உருவாக்க தோமையார் பரங்கிமலையில் மரித்து சாந்தோமில் அடக்கம் செய்யபட்டார் என கதை கிளப்பினர்
அந்த புரட்டுகதை இக்காலம் வரை நிலைத்திருக்கின்றது.
ஆனால் கோவா போல் சென்னை முழுவதும் மாறவில்லை அதற்கு ஏகபட்ட காரணங்கள் உண்டு