நடக்க போகும் ஏதோ ஒரு மாற்றத்தை சொல்கின்றது..

அது 40 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் சாதாரண சம்பிரதாயமாகவே தொடங்கிற்று

ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் பக்தி எழுச்சியும் , உலகெங்கும் இருந்து காஞ்சியில் குவியும் போக்குவரத்து வசதியும் மிகபெரும் கூட்டத்தை கூட்டிவிட்டது

காவல்துறை, ஆலய நிர்வாகம் என யாருமே எதிர்பார்க்காத மக்கள் நெருக்கம் அது

கடந்தவாரமே கூட்டம் அதிகரிக்கின்றது, தகுந்த ஏற்பாடுகள் தேவை என எச்சரிக்கை குரல்கள் வந்தது ஆனால் நடவடிக்கை இல்லை

விளைவு 4 பேர் நெரிசலில் பலி எனும் அளவு விவகாரம் சென்றாயிற்று.

இனியாவது மேலதிக நடவடிக்கை எடுக்கபட்டு பாதுகாப்புகளும் மக்களுக்கான வசதிகளும் மேம்படுத்தபடட்டும்

இப்பொழுதெல்லாம் எல்லா ஆலயங்களும் நிரம்பி வழிவதும், அத்திவரதருக்கு எதிர்பாரா மாபெரும் பக்தர் கூட்டம் வந்து கொண்டிருப்பதும் இம்ண்ணில் நடக்க போகும் ஏதோ ஒரு மாற்றத்தை சொல்கின்றது..